பின்ராயி விஜயன் அமெரிக்க சிகிச்சை முடிந்த நாடு திரும்பினார்

திருவனந்தபுர,, அமெரிக்க நாட்டுக்கு சிகிச்சைக்காக சென்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் நாடு திரும்பியுள்ளார். கடந்த 5 ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் உயர் சிகிச்சைக்காக அமரிக்கா சென்றிருந்தார்.  அவருக்கு 10 நாட்கள் அமெரிக்காவில் உள்ள  மினசோட்டாவில்  மாயோ மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பினராயி விஜயன் சிகிச்சைக்கு பின் தனது மனைவி கமலா விஜயனுடன்  கேரளா திரும்பினார். அவரை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்த்தில்கேரளா  தலைமைச் செயலாளர், மாநில காவல்துறைத் தலைவர் ஆகியோர் … Read more

கழிவறை பற்றாக்குறை விவகாரம்; ஐகோர்ட்டுகளை கடிந்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு

புதுடெல்லி, நாட்டில் பொதுமக்களுக்கு சட்ட ரீதியாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் கோர்ட்டுகளுக்கு நாள்தோறும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு தொடுத்தவர்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் என பலர் வந்து செல்வார்கள். ஆனால், அவர்களுக்கு போதிய கழிவறை வசதிகள் இல்லாததுபற்றி வழக்கறிஞரான ரஜீப் கலிதா, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதுபற்றி கடந்த ஜனவரி 15-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரணை மேற்கொண்டது. அப்போது, முறையான தூய்மை என்பது அரசியல் சாசனத்தின் பிரிவு 21-ன் கீழ் … Read more

ப வடிவ பள்ளி இருக்கைகள்: "மருத்துவர்களைக் கலந்தாலோசித்து முடிவு எடுக்கணும்" – ஓபிஎஸ் வலியுறுத்தல்

பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கைகள் குறித்து மருத்துவர்களைக் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்குமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி, முன்னாள் முதல்வரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுத் தலைவருமான ஓபிஎஸ் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவ, மாணவியரை நல்லவராகவும், வல்லவராகவும், புகழ் மிக்கவராகவும் வாழ வைக்க கல்வி மிகவும் அவசியம் என்பதன் அடிப்படையில் கட்டணமில்லாக் கல்வி தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு … Read more

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் மரணம்…

மலேசியாவில் இருந்து தமிழகம் வந்த பயணி நடுவானில் மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையங்குடியைச் சேர்ந்த சசிகுமார் (50) கடந்த சில தினங்களுக்கு முன் மலேசியா சென்றிருந்த நிலையில் இன்று காலை அங்கிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டார். கோலாலம்பூரிலிருந்து இன்று அதிகாலை திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் மூலம் பயணம் மேற்கொண்ட அவர் பயணத்தின் நடுவில், கடுமையான அசௌகரியத்தை அனுபவித்ததாகவும், தனது இருக்கையில் சரிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. விமானக் குழுவினர் உடனடியாக அவருக்கு உதவ … Read more

'இப்படி ஒரு தேர்தல் வரலாறு… இதில் என்னைப் பற்றி ஸ்டாலின் பேசலாமா?' – எடப்பாடி பழனிசாமி பதிலடி

எடப்பாடி பழனிசாமி ஸ்டாலினை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” திரு. ஸ்டாலின் அவர்களே… நீங்கள் எங்கு இருந்தாலும், உங்க எண்ணம் முழுக்க என் எழுச்சிப்பயணத்தைச் சுற்றியே தான் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். “உங்களுடன் ஸ்டாலின்” ன்னு ப்ரோமோஷன் பண்ணியிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள் , ஆனால் AMMA -வின் திட்டத்தை copy paste செய்துள்ளீர்கள் என்பதை உரக்க சொல்லி இருக்கிறேன், அதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா? ஸ்டாலின் … Read more

ஒடிசாவில் தீக்குளித்த மாணவியின் பெற்றோருக்கு ராகுல் காந்தி ஆறுதல்

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒடிசாவில் தீக்குளித்து மரணமடைந்த மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில், “ஒடிசாவின் பாலசோரில் நீதிக்கான போராட்டத்தில் தனது உயிரை இழந்த மாணவியின் தந்தையிடம் பேசினேன். அவரது குரலில், உயிரிழந்த மாணவியின் வலி, அவரது கனவு, போராட்டம் ஆகியவற்றை என்னால் உணர முடிந்தது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சியும் நானும் முழுமையாக அவருக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற உறுதியை அளித்தேன். நடந்த சம்பவம் மனிதாபிமானமற்றது, … Read more

Tesla Model Y on-road price – டெஸ்லா மாடல் ஓய் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவை.!

இந்தியாவில் அதிகாரப்பூர்வ விற்பனையை துவங்கியுள்ள எலான் மஸ்கின் டெஸ்லாவின் எலக்ட்ரிக் காரான மாடல் ஓய் (Tesla Model Y)எஸ்யூவி ரூ.58,89,000 ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டு முன்பதிவு துவங்கப்பட்டுள்ள நிலையில் டெலிவரி 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் துவங்கப்பட உள்ளது. முன்பதிவு கட்டணம் ரூ.22,220 வசூலிக்கப்படும் நிலையில் அடுத்த 7 நாட்களுக்குள் ரூ3,00,000 செலுத்த வேண்டும் மேலும் இந்த தொகை திரும்ப பெற முடியாத (non-refund) வகையில் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. முதலில் டெஸ்லா மாடல் Y விலைப்பட்டியல் … Read more

Zomato: ஏ.ஆர்.ரஹ்மான், ஷாருக்கான், பும்ரா.. விளம்பரம் டிரெண்டிங் ஆனது ஏன்? – CEO சொன்ன காரணம்

ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ தனது புதிய விளம்பரமான ஃப்யூவல் யுவர் ஹஸ்டல் (Fuel your Hustle) மூலம் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த விளம்பரத்தில் இந்தியாவின் முன்னணி பிரபலங்களான நடிகர் ஷாருக்கான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கிரிக்கெட் வீரர் பும்ரா, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த விளம்பரம் வெற்றியின் பின்னணியில் உள்ள கடின உழைப்பு மற்றும் முயற்சியை எடுத்துக்காட்டு விதமாக அமைந்துள்ளது. ஸொமேட்டோ ஸொமேட்டோவின் இந்த விளம்பரம் கிரிக்கெட் வீரர் … Read more

கமலஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை கமலஹாசன் மாநிலங்களவை எம் பி ஆனதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூலை 24 ஆம் தேதியுடன் தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வான வைகோ, பி.வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, அன்புமணி மற்றும் சந்திரசேகரன் ஆகியோரது பதவிக்காலம் நிறைவடைவதால் இந்த, 6 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக சாா்பில் பி.வில்சன், கவிஞா் சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோரும், அதிமுக சாா்பில் தனபால், ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்து அனைவருமே போட்டியின்றி … Read more

நீலகிரி: சிறுத்தைகளைக் காவு வாங்கும் சுருக்கு கம்பிகள்; என்ன செய்யப்போகிறது வனத்துறை?

வனங்கள் நிறைந்த நீலகிரியில் வனத்திற்கு எதிரான குற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அண்டை மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகளைப்‌ போல் ஊடுருவி வனவிலங்குகளை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் வேட்டை கும்பல் ஒருபுறம் என்றால், நாட்டு வெடி மற்றும் சுருக்கு வலை கம்பிகள் மூலம் முயல், காட்டுப்பன்றி, கடமான்களை வீழ்த்தும் உள்ளூர் கும்பல் மறுபுறம் எனப் போட்டிப்போட்டு வனவிலங்குகளை அழித்து வருகின்றனர். சுருக்கில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை தேயிலைத் தோட்டங்களில் வைக்கப்படும் சுருக்கு வலை கம்பிகளில் புலி, சிறுத்தை போன்ற … Read more