விமான நிறுவனங்கள் 80% பயண சேவைகளை வழங்கலாம் – மத்திய அரசு அனுமதி

நாடெங்கும் விமான நிறுவனங்கள் தங்கள் வழக்கமான பயண சேவையில் 80% வரை இயக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதித்துள்ளது.   கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்கு முன் விமான நிறுவனங்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கையில் 72.5% வரை மட்டுமே இயக்க வேண்டும் என விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியிருந்தது.   இதையும் படியுங்கள்: பஞ்சாப்: புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை சோனியா காந்திக்கு … Read more விமான நிறுவனங்கள் 80% பயண சேவைகளை வழங்கலாம் – மத்திய அரசு அனுமதி

மிருகக்காட்சி சாலையில் புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

உலகின் பல பகுதிகளில் உள்ள மிருகக்காட்சி சாலை விலங்குகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது சோதனையின் மூலம் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் 6 ஆப்பிரிக்க சிங்கங்கள், சுமத்ரான் புலி மற்றும் இரண்டு அமுர் புலிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சோம்பல், இருமல் மற்றும் தும்மலின் அறிகுறிகளை கொண்டிருந்த புலிகள் மற்றும் சிங்கங்கள் பரிசோதனை உட்படுத்தப்பட்டதன் மூலம் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. பராமரிப்பாளரிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா தொற்று … Read more மிருகக்காட்சி சாலையில் புலிகள் மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

பஞ்சாப் முதல்வராக சுக்ஜிந்தர் சிங் தேர்வு?- விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

பஞ்சாப் அமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவாவின் பெயரை அடுத்த முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஞ்சாபில் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையே நீண்ட காலமாகக் கருத்து வேறுபாடு உள்ளது. தொடர் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக , கட்சியின் மாநிலத் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். எனினும், முதல்வர் அமரீந்தரைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்த சித்து மன்னிப்பு … Read more பஞ்சாப் முதல்வராக சுக்ஜிந்தர் சிங் தேர்வு?- விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

கோயில் இடிப்பு.. இந்துக்களுக்கு பாஜக துரோகம்.. இந்து மகாசபை தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்துக்களுக்கு பாஜக துரோகம் செய்துவிட்டதாக இந்து மகாசபை குற்றம்சாட்டியுள்ளது. கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள பழைமை வாய்ந்த கோயில் ஒன்று இடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி அளித்து இந்துக்களுக்கு பாஜக துரோகம் செய்துவிட்டதாக இந்து மகாசபையின் கர்நாடக மாநில செயலாளர் தர்மேந்திரா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “இந்துக்களை பாதுகாப்பதற்காக காந்தியை கூட விட்டுவைக்கவில்லை. இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக காந்தி கூட கொலை செய்யப்படுவாரானால், உங்களுக்கும் (கர்நாடக … Read more கோயில் இடிப்பு.. இந்துக்களுக்கு பாஜக துரோகம்.. இந்து மகாசபை தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு!

கேரளாவில் நவம்பர் முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு!

இந்தியாவிலேயே அதிக கொரோன தொற்று கொண்ட மாநிலமாக கேரள இருந்து வந்தது. சமீபத்தில் ஓணம் பண்டிகையை ஒட்டி கேரளாவில் சிறிய தளர்வுகள் அளிக்கப்பட்டது.  இதன் காரணமாக குறைந்திருந்த கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்தது.  அதன் பின் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.   கேரளாவில் தினசரி தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையையும், கொரோனா பரிசோதனை எண்ணிக்கையையும் அதிகப்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.  அதன்படி, நாட்டிலேயே தினசரி கொரோனா தொற்று அதிகம் பதிவாகும் கேரளாவில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் … Read more கேரளாவில் நவம்பர் முதல் அனைத்து பள்ளிகளும் திறப்பு!

அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்த 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து நீர் வரவழைப்பு Sep 19, 2…

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்த 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து  நீர் வரவழைக்கப்பட்டுள்ளது.  ”உலகமே ஒரு குடும்பம் என்பதை உணர்த்தும் வகையில் இது அமைந்து உள்ளது,” என, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். சிறிய குடுவைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்த நீர், ராஜ்நாத் சிங்கிடம் டில்லியில் நேற்று ஒப்படைக்கப்பட்டது.  ராமர் பட்டாபிஷேகம் நடந்தபோது உலகின் பல கடல்களில் இருந்து நீர் வரவழைக்கப்பட்டதாகக் … Read more அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்த 115 நாடுகளில் ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து நீர் வரவழைப்பு Sep 19, 2…

உத்தர பிரதேசத்தில் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்குகிறார்?

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளது. கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியின் தலைமையில் தேர்தல் பணிகள் நடைபெறுகின்றன. இந்த முறை பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக களமிறங்கலாம் என தெரிகிறது. இதுபற்றி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சல்மான் குர்ஷித் பிரயாக்ராஜ் நகரில் செய்தியாளர்களிடம் … Read more உத்தர பிரதேசத்தில் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்குகிறார்?

எல்லைப்புறச் சாலைகள் நிறுவனத்தில் முதல்முறையாக பெண் ராணுவ அதிகாரி ஒருவர் கமாண்டிங் அதிகாரியாக நியமனம்

உத்தராகண்ட்: எல்லைப்புறச் சாலைகள் நிறுவனத்தில் முதல்முறையாக பெண் ராணுவ அதிகாரி ஒருவர் கமாண்டிங் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உத்தராகண்ட்டில் செயல்பட்டு வரும் 75-வது சாலை அமைக்கும் நிறுவனத்துக்கு தளவாயாக மேஜர் ஆய்னா நியமிக்கப்பட்டுள்ளார். தளவாய் மேஜர் ஆய்னாவின் கீழ் கேப்டன் அஞ்சனா, பாவனா, ஜோஷி, விஷ்ணுமாயா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். சீனா, பாகிஸ்தான், வங்கதேசத்துடனான எல்லைகளில் சாலைகள் அமைக்கும் நிறுவனம் (BRO) பாதுகாப்புத்துறையின் கீழ் உள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் வேகமாக பரவும் புது வகை டெங்கு – மத்திய அரசு எச்சரிக்கை 

கடுமையாக பாதிக்கும் வகை டெங்கு காய்ச்சல் தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் வேகமாக பரவுவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.   செரோடைப் – 2 வகை டெங்கு காய்ச்சல் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்களில் அதிகளவில் பதிவாகி வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வேகமாக பரவுவதுடன் அதிகளவு உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தும் இவ்வகை டெங்கு வைரஸ் பரவலை தொடக்கத்திலேயே தடுத்து நிறுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என … Read more தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களில் வேகமாக பரவும் புது வகை டெங்கு – மத்திய அரசு எச்சரிக்கை 

மருத்துவ சீட் வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த பாஜக டிக்டாக் தம்பதி..!

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காயத்திரி, கோகவரம் பகுதியின் பாஜக தலைவராக உள்ளார். இவரது கணவர் ஸ்ரீதர். இந்த தம்பதியினர் சினிமா பாடல்களுக்கு டிக்டாக் செய்து பிரபலமடைந்துள்ளனர். இந்நிலையில், ஏலூரை சேர்ந்த கவுரிசங்கர் என்பவர் தனது மகளுக்கு வெளிநாட்டு மருத்துவ சீட் வாங்கித்தர உதவ முடியுமா என இந்த தம்பதியிடம் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் தங்களுக்கு வெளிநாடுகளில் பல கல்லூரிகளில் இருப்பவர்களைத் தெரியும், நாங்கள் சீட்டு வாங்கி கொடுக்கிறோம் என கூறியுள்ளனர். இவர்களின் பேச்சை நம்பி, அவரும் பல … Read more மருத்துவ சீட் வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த பாஜக டிக்டாக் தம்பதி..!