எஸ்ஐஆர்-க்கு எதிர்ப்பு: சாத்தூர் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
சாத்தூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சாத்தூர் அருகே கிராம மக்கள் இன்று கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. இதற்காக, வாக்காளர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை விருதுநகர் மாவட்டத்தில் 14,62,874 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெளியூர்களில் பணிபுரிபவர்கள் தங்களுக்கான படிவங்களைப் பெற்றுக்கொள்வதை எளிதாக்குவதற்காகவும், படிவங்களை நிரப்புவதற்கும், 2002-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது … Read more