“அமித் ஷா கட்டுப்பாட்டில் தான் அதிமுக உள்ளது” – உதயநிதி பேச்சு

சிவகங்கை: அமித் ஷா கட்டுப்பாட்டில்தான் அதிமுக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற சார்பு – அணிகள் கூட்டத்தில் உதயநிதி பேசியது: “தேர்தல் நேரங்களில் ஐடி அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். திமுகவில் 25 அணிகள் உண்டு. ஆனால் அதிமுகவே 25 அணிகளாக பிரிந்து விட்டது. அக்கட்சி நிர்வாகிகள் பழனிசாமிக்கு கட்டுப்படுவதில்லை. தற்போது அமித் ஷா கட்டுப் பாட்டில் தான் அதிமுக உள்ளது. பாஜக … Read more

சாதிவாரி கணக்கெடுப்பு: ஒரு பிரத்தியேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும் – விஜய் வலியுறுத்தல்!

ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வகுப்புக்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் சமூக நிலை குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார்.

வடகலை, தென்கலை… ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள்: உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: வடகலை, தென்கலை இரண்டும் ஒரு பூ காம்பில் உள்ள இரு இதழ்கள் எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், குருக்களின் பெயரில் மோதலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என இரு பிரிவினருக்கும் அறிவுரை வழங்கியுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள 18 திவ்யதேசங்களில் ஒன்றான சின்னகாஞ்சி விளக்கொளி பெருமாள் எனும் தீபப்பிரகாசர் கோயில் விழாக்களின் போது, கோயிலுக்கு வெளியில் தென்கலை மந்திரம் பாடவும், தென்கலை வாழி திருநாமம் பாடவும் அனுமதி மறுத்த கோயில் செயல் அலுவலர் உத்தரவை எதிர்த்து, … Read more

மின் கட்டணத்தை உயர்த்துகிறது தமிழ்நாடு அரசு… அன்புமணி போட்ட திடீர் குண்டு!

Anbumani Vellore Speech: ஜூலை ஒன்றாம் தேதி முதல் 3.5 விழுக்காடு மின் கட்டணம் 4வது முறையாக உயர்த்தப்பட உள்ளது என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

“சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் சமூக அநீதிக்கு தமிழக அரசு துணைபோக கூடாது” – விஜய்

சென்னை: “மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்த வேண்டும். இதைச் செய்யாமல், மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற மத்திய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு, பாஜகவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது” என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் … Read more

மதுரை வேளாண் பல்கலைக்கழகம் என்னாச்சு? ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் குறித்து மத்திய அரசை விமர்சித்த நிலையில், பாஜகவை சேர்ந்த அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.  

டாஸ்மாக் வழக்கு: ஆகாஷ் பாஸ்கரன், ரவீந்திரன் குறித்த ஆவணங்களை அளிக்க அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் டாஸ்மாக்கில் முறைகேடு தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். இந்நிலையில், அமலாக்கத் … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. வீடு வீடாக விநியோகிக்கும் சேவையை தொடங்கும் தமிழக அரசு

PwDs Ration Card News: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு பொது விநியோக திட்டத்தின் மூலம் வீடு வீடாக அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு தொடங்க உள்ளது.

ராமேசுவரம் நம்புநாயகி அம்மன் கோயிலில் மகள்களுடன் சவுமியா அன்புமணி நேர்த்திக்கடன்

ராமேசுவரம்: பாமக கட்சியின் பரபரப்பான கோஷ்டி மோதலுக்கு இடையே ராமேசுவரம் நம்புநாயகி அம்மன் கோயிலில் சவுமியா அன்புமணி தனது இரு மகள்களுடன் நேர்த்திக்கடன் செலுத்தினார். பாமகவில் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கட்சிப் பொருளாளர் திலகபாமா, சமூக நீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 60 மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை ராமதாஸ் நீக்கியுள்ளார். அன்புமணியுடன் சென்ற மாநிலப் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணனை கட்சிப் பதவியில் இருந்து … Read more

80 வயது மூதாட்டிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. கடலூர் அருகே நடந்த கொடூரம்!

கடலூர் அருகே 80 வயது மூதாட்டிக்கு மர்ம நபர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.