ஓசூர் மலைக்கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா துவக்கம்

ஓசூர் மலைக்கோவிலில் பங்குனி உத்திர திருத்தேர் திருவிழா உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம். ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி காட்சி.  

வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார் ஸ்டாலின்: தேர்தல் அறிக்கையும் வெளியாகிறது

சென்னை: தமிழகத்தில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல், திமுக தேர்தல் அறிக்கை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். திமுக தலைமையிலான இண்டியா கூட்டணியில், கூட்டணி கட்சிகள் 19 தொகுதிகளிலும், திமுக நேரடியாக 21 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. காங்கிரஸ் கட்சி விருப்ப மனு பெற்றுள்ள நிலையில், ஒருசில நாளில் வேட்பாளர் அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில், திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான … Read more

கடல் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரம்; தமிழகம் முழுவதும் விநியோகம் செய்ய ரூ.11,485 கோடி செலவில் வழித்தடம்

சென்னை: தமிழகத்தில் கடலில் அமைக்கப்படும் காற்றாலை மின்சாரத்தை எடுத்து வந்து பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்க ரூ.11,485 கோடி செலவில் வழித்தடத்தை மத்திய அரசு அமைக்கிறது. தமிழகம், குஜராத் மாநிலங்களில் உள்ள கடல் பகுதிகளில் 30 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்கள் அமைக்க சாதகமான சூழல் நிலவுகிறது. இதை மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க மின்துறை ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. இதையடுத்து, முதல் கட்டமாக இரு மாநிலங்களிலும் தலா 5 ஆயிரம் மெகாவாட் திறனில் கடலில் காற்றாலை மின்நிலையங்கள் … Read more

தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது

சென்னை: தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கான வாக்குப்பதிவு, முதல்கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, தமிழகம், புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மார்ச் 27-ம் தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து மற்ற … Read more

நெல்லையில் 7 ஆண்டுகளாக இருந்த அன்புச் சுவர் அகற்றம்: தேர்தல் நடத்தை விதிகள் காரணமாம்!

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலக பிரதான வாயிலின் அருகே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த, ஏழைகளுக்கு பயன் அளித்துவந்த அன்புச் சுவர் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி அகற்றப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக சந்தீப்நந்தூரி பொறுப்பு வகித்தபோது கடந்த 2017-ம் ஆண்டில் இந்த அன்பு சுவர் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. இந்த அன்புச் சுவர் முன்பு வைக்கப்பட்ட இரும்பு கூடைக்குள் பொதுமக்கள் தங்களிடம் தேவைக்கு அதிகமாக … Read more

‘தேர்தல் பணிக்காக அரசு இயந்திரத்தை திமுக தவறாக பயன்படுத்தப்படுகிறது’ – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தருமபுரி: தேர்தல் வெற்றிக்காக தமிழகத்தில் ஆளும் கட்சியால் அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தருமபுரியில் குற்றம்சாட்டினார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) மாலை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தருமபுரி வந்தார். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது.. “வரவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக-வுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி பணியாற்றும். திமுக கூட்டணி … Read more

பள்ளி காம்பவுண்ட், ஆட்டோ, வீடு, கடை…. வேகமாக வந்த 2 லாரிகளின் வெறியாட்டம்: பகீர் விபத்து

விபத்து ஏற்படுத்திய இரண்டு லாரிகளின் ஓட்டுனர்களும் தப்பி ஓடிய நிலையில் களியக்காவிளை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பாஜக மேடையில் அணிவகுத்த கட்சிகள்… ‘வீக்’ ஆகிறதா அதிமுக ‘கணக்கு’?

பாஜக பொதுக் கூட்டம் சேலத்தில் நடைப்பெற்றது. அதில் பாஜகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுகவைவிட பலத்த கூட்டணியை அமைத்துவிட்டதா பாஜக? அதிமுக நிலை என்ன? – ஒரு விரைவுப் பார்வை. பிரதமர் மோடி பங்கேற்ற பாஜக பொதுக் கூட்டம் செவ்வாய்கிழமை சேலத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற தலைவர்கள் பங்கேற்றனர். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், … Read more

ராசிபுரம் அருகே தீண்டாமை சம்பவம்… காவல் நிலையத்தில் புகார்..!

ராசிபுரம் அருகே தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி திருத்தம் செய்யக்கூடாது என ஊர் கட்டுப்பாடு என முடி திருத்தம் செய்ய வந்தவரிடம் சலூன் கடைக்காரர் பேசும் வீடியோ வைரல் ஆன நிலையில், இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.