மே 11 சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும்

சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் மே 11-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கனடாவின் அதிரடி அறிவிப்பு.. வியந்துபோன நாம் தமிழர் சீமான் நெஞ்சார்ந்த பாராட்டு..!!

“தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை” சட்டமாக்கிய கனடா நாட்டின் ஒன்டாரியோ (Ontario) மாகாண அரசை உலகத்தமிழினம் என்றும் நன்றியுடன் நினைவுகூரும் என சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” ஈழத்தில் சிங்கள பேரினவாத அரசால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இந்நூற்றாண்டின் பாரிய இனப்படுகொலைக்கு உரிய நீதியைப் பெறமுடியாமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உலகத்தமிழினம் போராடிவருகிறது. ஈழ மண்ணில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பிறகு ஈழத்திலும், தமிழர்களின் மற்றுமொரு தாய்நிலமான தமிழகத்திலும், … Read more கனடாவின் அதிரடி அறிவிப்பு.. வியந்துபோன நாம் தமிழர் சீமான் நெஞ்சார்ந்த பாராட்டு..!!

#BREAKING ‘6 மாதம் சிறை, ரூ. 10, ஆயிரம் அபராதம்’… தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாளை மறுநாள் முதல் மே 24ம் தேதி வரை இரு வாரங்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாளை வழக்கமான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள் என்பதால் இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை … Read more #BREAKING ‘6 மாதம் சிறை, ரூ. 10, ஆயிரம் அபராதம்’… தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழையும், நீலகிரி, குமரி மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தரைக்காற்று மேற்கு வடமேற்கு திசையிலிருந்து தமிழகம் நோக்கி வீச வாய்ப்புள்ளதால், கடலோரம் மற்றும் … Read more வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்

முழு ஊரடங்கு நோய்தொற்றை கட்டுப்படுத்த பேருதவியாக இருக்கும்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் பாராட்டு

தமிழக அரசு அறிவித்துள்ள 2 வார ஊரடங்கு தமிழகத்தில் நோய்த்தொற்றின் பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும், ஏழைகள் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருப்பதையும், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: “மருத்துவமனைகளில், தடுப்பூசிகள், மருந்துகள் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய … Read more முழு ஊரடங்கு நோய்தொற்றை கட்டுப்படுத்த பேருதவியாக இருக்கும்: தமிழக அரசுக்கு ஓபிஎஸ் பாராட்டு

எதிர்க்கட்சி தலைவராகவே மாறிய ஓபிஎஸ்..! ஸ்டாலினுக்கு கடிதம்… சைலண்டில் ஈபிஎஸ்

மருத்துவமனைகளில், தடுப்பூசிகள், மருந்துகள் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்வதற்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், ”கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது நோய் தொற்று நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்திட பேருதவியாக இருக்கும். எளியோரின் பசி தீர்க்கும் … Read more எதிர்க்கட்சி தலைவராகவே மாறிய ஓபிஎஸ்..! ஸ்டாலினுக்கு கடிதம்… சைலண்டில் ஈபிஎஸ்

சித்திர ரேவதியை முன்னிட்டு ஆண்டாள் அணிவித்த பட்டு வஸ்திரங்கள் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சென்றன

திருவில்லிபுத்தூர்: சித்திரை ரேவதியை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிவித்த பட்டு வஸ்திரங்கள் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கொண்டு செல்லப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் ரேவதி நட்சத்திரம் திருச்சி ஸ்ரீரங்கநாதர் பிறந்த தினமாகும். இந்த நட்சத்திரத்தில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிவித்த பட்டு வஸ்திரங்களை அணிந்து ஸ்ரீரங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். நாளை (மே 9) ஸ்ரீரங்கநாதர் பிறந்த நட்சத்திரமான சித்திரை ரேவதி வருகிறது. இதையொட்டி ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு அந்த பட்டு வஸ்திரங்கள் திருச்சி … Read more சித்திர ரேவதியை முன்னிட்டு ஆண்டாள் அணிவித்த பட்டு வஸ்திரங்கள் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சென்றன

தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்

தமிழக சட்டப்பேரவை தற்காலிக சபாநாயகராக கீழ்பெண்ணாத்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு. பிச்சாண்டி நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, தமிழகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் 15 புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பதினாறவது சட்டமன்ற பேரவையில் முதல் கூட்டத்தொடர் 2021- ஆம் ஆண்டு மே திங்கள் 11 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் வைத்து நடைபெறும் என்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பேரவைத்தலைவர் மற்றும் பேரவைத் … Read more தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்

குழந்தைகள் பத்திரம்! கொரோனா தொற்றும் அபாயம் ……. வீட்டுக்கு வெளியே விடாதீங்க!

கோவை : பெற்றோரே…உஷார்!கொரோனா முதல் அலை போல் அல்லாமல், தற்போதைய இரண்டாம் அலையில், குழந்தைகளும் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவதாக, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், குழந்தைகளை வெளியே விளையாட விடுவதை,தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளனர்.இது குறித்து, தமிழக சுகாதாரத்துறை சில புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 6ம் தேதி நிலவரப்படி, 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 46,527 குழந்தைகள், தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்., 1ம் தேதிக்குள், 1,306 குழந்தைகள் பாதிக்கப்பட்டனர். ஆனால், ஏப்., 1ம் … Read more குழந்தைகள் பத்திரம்! கொரோனா தொற்றும் அபாயம் ……. வீட்டுக்கு வெளியே விடாதீங்க!

கொரோனா நிவாரண நிதி திட்டத்தை மே10ம் தேதி தொடக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கொரோனா நிவாரண நிதியாக 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹4,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் முதல் தவணை தொகையாக ₹2000 வழங்கும் திட்டத்தை மேம் மாதம் 10ம் தேதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.