கிறிஸ்துமசை முன்னிட்டு சாண்டா கிளாஸ்கள் ஓட்டம்
மெக்ஸிகோவில் நடந்த சாண்டா கிளாஸ் ஓட்டப்பந்தயத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதை முன்னிட்டு அந்நாட்டுத் தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். சிவப்பு உடையணிந்து நகர வீதிகளிலும், சாலைகளிலும் சாண்டா கிளாஸ்கள் ஓடிய காட்சிகளை மக்கள் கண்டு ரசித்தனர். Source link