செட்டப் ஒன்னு தான்… ஆனா கெட்டப் வேற… Airtel-இன் குளறுபடி திட்டம்!

முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி Airtel, அதன் பயனர்களுக்கு புது திட்டங்களை அறிவித்து வருகிறது. ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்வைத் தொடர்ந்து பயனர்களை தக்கவைக்கும் முயற்சியில் ஏர்டெல் இறங்கியுள்ளது. அதற்காக இப்படியா என்று கேட்கும் அளவிற்கு, நிறுவனம் பயனர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஏர்டெல் நிறுவனமானது, 3 ஒரு வருட திட்டங்களை பயனர்களுக்காக தங்கள் இணையதளத்தில் பட்டியலிட்டுள்ளது. அதில் ரூ.2999, ரூ.3359 ஆகிய திட்டங்கள் அடங்கும். இந்த இரண்டு திட்டங்களுக்கு ஒரே பலனை அளித்திருக்கும் ஏர்டெல், கட்டணத்தை மட்டும் முன்னுக்கு பின் முரணாக அமைத்துள்ளது. உங்களுக்கு புரிய வேண்டும் என்றால், தொடர்ந்து வரும் திட்டங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Sell Old Phone: பழைய போனுக்கு நல்ல விலை வேண்டுமா… கவலைய விடுங்க!

ஏர்டெல் ரூ.3,359 ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs.3,359 recharge plan)

ஏர்டெல்லின் ரூ.3,359 ரீசார்ஜ் திட்டமானது, பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 இலவச எஸ் எம் எஸ் ஆகிய வசதிகளை வழங்குகிறது. 365 நாள்கள் அதாவது ஒரு ஆண்டு இத்திட்டம் செல்லுபடியாகும். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்பு (Disney+ Hotstar Mobile Edition) 365 நாள்களுக்கும், 3 மாதங்கள் அப்பல்லோ 27/7 சர்கிள், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் கோர்ஸ், பாஸ்டேக் (Fastag) ரீசார்ஜில் 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ் (Hellotunes), இலவச விங் மியூசிக் (Wynk Music) ஆகியவற்றின் கூடுதல் அணுகல்கள் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

150Mbps broadband plans: 3.5TB வரை டேட்டா… OTT தளங்களின் சந்தாவும் இலவசம்!

ஏர்டெல் ரூ.2,999 ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs.2,999 recharge plan)

ஏர்டெல் வழங்கும் ரூ.3,359 ரீசார்ஜ் திட்டமும் 365 நாள்களுக்கு செல்லுபடியாகும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 இலவச SMS ஆகிய நன்மைகள் கிடைக்கிறது. மேலும், ரூ.3,359 திட்டத்தில் உள்ளது போன்றே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்பு 365 நாள்களுக்கும், 3 மாதங்கள் அப்பல்லோ 27/7 சர்கிள், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் கோர்ஸ், பாஸ்டேக் (Fastag) ரீசார்ஜில் 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ் (Hellotunes), இலவச விங் மியூசிக் (Wynk Music) ஆகியவற்றின் அணுகல்களும் பயனர்களுக்குக் கூடுதலாகக் கிடைக்கிறது.

Asus Rog Phone 5S: இதுவரை எந்த போனிலும் இல்லாத அம்சம்… அதென்ன தெரியுமா!

ஏர்டெல் ரூ.1,799 ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs.1,799 recharge plan)

ஏர்டெல்லின் ரூ.1,799 திட்டமும் 365 நாள்களுக்குச் செல்லுபடியாகும் ஒரு வருட ரீசார்ஜ் திட்டமாகும். இதில் பயனர்களுக்கு மொத்தம் 24ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு பயனர்களுக்கு கிடைக்கிறது. பிற திட்டங்களைப் போன்று தினசரி எஸ் எம் எஸ் என்றில்லாமல் மொத்தமாக 3,600 இலவச எஸ் எம் எஸ் மட்டும் இத்திட்டத்தின் மூலம் பயனர்களுக்குக் கிடைக்கும். இந்த திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல் வழங்கப்படவில்லை. ஆனால், 3 மாதங்கள் அப்பல்லோ 27/7 சர்கிள், ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் கோர்ஸ், பாஸ்டேக் (Fastag) ரீசார்ஜில் 100 கேஷ்பேக், இலவச ஹெலோடியூன்ஸ் (Hellotunes), இலவச விங் மியூசிக் (Wynk Music) ஆகியவற்றின் நன்மைகள் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

Poco M4 Pro 5G: டர்போ ரேம், புதிய டைமென்சிட்டி 810 சிப்செட், 50MP ஷார்ப் கேமரா – விலை என்ன தெரியுமா?

குழப்பத்திற்கு உண்டான இரு திட்டங்களில் ஒன்றை ஏர்டெல் விரைவில் சரிசெய்ய வேண்டும். பயனர் சேவையை போற்றும் நிறுவனங்கள், அவர்களை குழப்பாமல் இருப்பதே பெரும் சேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.