ரஜினிக்கு இருக்கும் ஒரே ஆசை இதுதானாம்.. நடந்தா செமயா இருக்குமே.!

நடிகர் ரஜினிகாந்திற்கு கோடான கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை கட்டி காத்துவரும் ரஜினியின் ரசிகர்கள் பலம் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே தான் செல்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கிறார்
ரஜினி
.

சில நேரங்களில் ரஜினி தோல்வி படங்களை கொடுக்கும்போதும் என்றுமே அவரது ரசிகர்கள் அவரை கைவிட்டதே இல்லை. அதன் காரணமாகத்தான் ரஜினியின் படங்கள் விமர்சனங்களில் முன்ன பின்ன இருந்தாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

தனுஷ் செய்யாததை செய்யும் சிம்பு..வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரஜினி தனது ரசிகர்களை வருடத்திற்கு ஒருமுறை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வார். இந்த வழக்கம் அவரது ஆரம்பகாலகட்டத்தில் துவங்கி 2018 ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்தது. பல ஊர்களிலிருந்து ரஜினியை சந்திக்க லட்சக்கணக்கில் ரசிகர்கள் வருவார்கள்.

அவர்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்று புகைப்படம் எடுத்துக்கொள்வார் ரஜினி. மேலும் ரஜினிக்கு ஒரு ஆசை இன்றும் நிறைவேறாமலே இருக்கிறதாம். அதாவது தன் ரசிகர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு உணவு விருந்து வைக்கவேண்டும் என்று ரஜினி பல ஆண்டுகளாக நினைத்து வருகிறாராம்.

அதற்கான முயற்சியையும் அவர் பலமுறை எடுத்துவந்துள்ளார். இருப்பினும் அதற்கு அரசு அனுமதி அளித்ததில்லையாம். ஏனென்றால் ரஜினியின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஒரே இடத்தில கூடினால் அவர்களை கட்டுப்படுத்துவது சிரமமான காரியமாகிவிடும். எனவேதான் இதற்கு எந்த ஒரு அரசும் இதுவரை அனுமதி அளிக்கவில்லை.

ஆனால் மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் சில முன்னணி நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு உணவு விருந்து அளித்துள்ளனர். ரஜினியின் நெருங்கிய நண்பரும், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகருமான சிரஞ்சீவி சில ஆண்டுகளுக்கு முன்பு தன் ரசிகர்களுக்கு உணவு விருந்து அளித்துள்ளார்.

இருப்பினும் ரஜினி பல ஆண்டுகளாக ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் முயற்சிகள் எடுத்தும் அது நடக்காதது அவருக்கு பெரும் வருத்தமாகவே உள்ளதாம். இனி வருங்காலங்களில் இந்த முயற்சி வெற்றி பெறுகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.