முடிவுக்கு வந்தது பிளாக்பெர்ரி சகாப்தம்… இன்று முதல் சேவைகள் கிடைக்காது!

பிளாக்பெர்ரி சகாப்தம் கிட்டத்தட்ட இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கனடாவைச் சேர்ந்தது பிளாக்பெர்ரி நிறுவனம். தற்போதைய செல்போன் உலகில் ஆப்பிள் ஐபோனுக்கு நிகராக பாதுகாப்பு அம்சங்களில் தனித்தன்மையுடன் செயல்பட்ட நிறுவனமான பிளாக்பெர்ரி போனுக்கென தனி வாடிக்கையாளர்கள் இருந்து வந்தனர். கீபோர்டை மையமாகக் கொண்ட போன்கள் செயல்பாட்டில் இருந்த வரை பிளாக்பெர்ரி புகழ்பெற்றதாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் ஆதிக்கம் பெருக, பிளாக்பெர்ரி சரிவை கண்டது. கடைசியாக 2013-ல் அறிமுகப்படுத்தபட்ட BlackBerry 10 மாடல் போன்கள் தனது புகழை … Read more

குடியரசு தின அலங்கார ஊர்தி: தேர்தல் கிஃப்ட்… பரிசை தட்டி சென்ற உ.பி.,!

குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில், நாட்டின் 73ஆவது குடியரசு தினம் கடந்த மாதம் 26ஆம் தேதி கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவையொட்டி, அன்றைய தினம் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் விழாவில், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கலாச்சாரங்களை குறிக்கும் மாதிரிகள் இடம்பெற்ற ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சார்பில், நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், … Read more

என்னது எதற்கும் துணிந்தவன் படத்தில் சிம்புவா ? இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய் பீம் OTT யில் சக்கைபோடுபோட்டது. இதைத்தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துமுடித்துள்ளார் சூர்யா. இப்படம் மார்ச் 10 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து இப்படத்தைப்பற்றி இயக்குனர் பாண்டிராஜ் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார். முதலில் இக்கதையை பாண்டிராஜ் நடிகர் சூர்யாவுக்காக எழுதவில்லையாம். வேறொரு ஹீரோவுக்காகத்தான் எழுதினாராம். எனவே இக்கதையை தயாரிப்பாளரிடம் சொன்னவுடன் இதற்கு சூர்யா பொருத்தமாக இருப்பார் என … Read more

உயிருக்கு போராடி சிகிச்சையின் பின் முன்னேறி வரும் இலங்கை தமிழ் சிறுமி

லண்டனில் புற்றுநோயுடன் போராடும், இலங்கை பூர்வீகம் கொண்ட சிறுமியின் பெற்றோருக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் பிரபல கால்பந்து வீரர் ஆஷ்லே கெய்ன் அளித்து வருகிறார். கால்பந்து நட்சத்திரமாக ஆஷ்லே மற்றும் காதலி சபியா வோராஜீ ஆகியோர் தங்கள் பெண் குழந்தை உயிரிழந்ததிலிருந்து பல நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு ஆதரவாக உள்ளனர். இந்த தம்பதியின் அன்பான குழந்தை அசேலியா கடந்த ஏப்ரல் மாதம் இரத்த புற்றுநோயான லுகேமியாவுக்கு எதிராக போராடி உயிரிழந்தார். லண்டனின் கிரேட் ஆர்மண்ட் தெரு மருத்துவமனையில் இதே … Read more

இமாச்சலத்தில் கொட்டும் பனியிலும் இயக்கப்பட்ட ரயில்கள் <!– இமாச்சலத்தில் கொட்டும் பனியிலும் இயக்கப்பட்ட ரயில்கள் –>

இமாச்சலப் பிரதேசத்தில் கொட்டும் பனிமழைக்கு இடையிலும் ரயில்வே சேவைகள் நீடிக்கின்றன. ரயில்கள் வெண் பனி போர்த்திய மலைப்பாதைகளில் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருக்கின்றன. கால்கா சிம்லா இடையே நேற்று ரயில்கள் கொட்டும் பனியிலும் இயக்கப்பட்டன. இதே போல் உத்தரகாண்ட்டிலும் கடும் பனிமழை பெய்து வருகிறது. இதனால் கங்கோத்ரி யமுனோத்ரி போன்ற உயரமான மலைப்பகுதிகள் பனியால் மூடப்பட்டு கண்ணுக்கு விருந்தளித்தன. சாமோலி என்ற இடத்தில் பனிச்சரிவால் சாலைகள் அடைபட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பனியை அகற்றுவதற்காக நீண்ட வரிசை கட்டி … Read more

கனடாவில் வேலை வாய்ப்புகள் 72% அதிகரிப்பு!

கனடாவில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 72 சதவீதம் அதிகரித்துள்ளதாக Statistics Canada புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்திய Statistics Canada புள்ளிவிவரங்களின்படி, கனடாவில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை 874,700-க்கும் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் செப்டம்பரில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து நேர உயர்விலிருந்து சரிவைக் கண்டாலும், நிரப்பப்படாத பதவிகளின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டை விட 72% அதிகமாக உள்ளது. Statistics Canada-ன் படி, வேலை காலியிடங்களின் விகிதம், மொத்த காலி மற்றும் நிரப்பப்பட்ட … Read more

வரும் 2026 ஆம் வருடம் மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிவடையும் :  மத்திய அமைச்சர்

டில்லி வரும் 2026 ஆம் வருடம் அக்டோபர் மாதம் மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிவடையும் என் மக்களவையில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ்  மருத்துவமனை பணிகள் வெறும் சுற்றுச் சுவருடன் நிறைவு பெற்றுள்ளது.   இது சமீபத்திய தமிழக சட்டசபைத் தேர்தலில் பேச்சுப் பொருளாக விளங்கியது.    இந்த தேர்தலில் பாஜக கூட்டணி தோல்விக்கு இதுவும்  ஒரு காரணம் என கூறப்பட்டது.  இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதிலாக மத்திய … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரிய சட்ட மசோதாவை  ஆளுநர்  திருப்பி அனுப்பியது, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.  தலைமைச் செயலகத்தில் உள்ள, நாமக்கல் கவிஞர் மாளிகையில்,  காலை 11:00 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. முதலமைச்சர் ஸ்டாலின்தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் … Read more

ராமானுஜரின் 216 அடி உயர சிலை – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

ஐதராபாத்: ஸ்ரீராமானுஜரின் 216 அடி உயர சமத்துவத்திற்கான சிலை ஹைதராபாத் முச்சிந்தல் பகுதியில் உள்ள திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் 45 ஏக்கரில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2-ம் தேதி முதல் வரும் 14-ம் தேதி வரை இங்கு லட்சுமி நாராயண யாகம் நடைபெற்று வருகிறது.  வேத மின்னணு நூலகம், ஆராய்ச்சி மையம்,  ஸ்ரீ ராமானுஜரின் பல படைப்புகளை விவரிக்கும்  கல்விக் கூடம் ஆகியவையும் இந்த வளாகத்தில் இடம் பெற்றுள்ளன. ஸ்ரீ ராமானுஜாச்சார்யா … Read more

பெரு நாட்டில் விமான விபத்து – 7 பேர் உயிரிழப்பு

நாஸ்கா: பெரு நாட்டின் நாஸ்கா நகரில் உள்ள மரியா ரீச் விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 207 இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றுள்ளது.  அதில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த 3 சுற்றுலாவாசிகள், சிலி நாட்டை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த 2 விமானிகள் இருந்தனர்.  தொல்பொருள் தளத்திற்கு மேலே பறந்த போது அந்த விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்து ஏழு பேரும் உயிரிழந்தனர்.  விமானம் தரையில் மோதிய பிறகு தீப்பிடித்ததாக … Read more