வாய் தவறி உளறிய பிடன்.. "அயோ தப்பு தப்பு".. கமலா கண்ணு எப்படி போகுது பாருங்க..!

உக்ரைனியர்கள் என்று சொல்வதற்குப் பதில் ஈரானியர்கள் என்று கூறி கேலி கிணட்லுக்குள்ளாகியுள்ளார் அமெரிக்க அதிபர்
ஜோ பிடன்
. அவர் இப்படி தவறாக பேசியதைப் பார்த்து குழப்பத்தில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் விழித்ததும் வைரலாகியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் மோதல் இப்போதைக்கு நிற்பதாக இல்லை. ரஷ்யா தனது நிலையிலிருந்து சற்றும் பின்வாங்கவில்லை. தொடர்ந்து உக்ரைனை வேகமாக வெளுத்தெடுத்து வருகிறது. அமெரிக்கா நேரடியாக இதில் தலையிட முடியாமல் தவித்துக் கொண்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் தங்களால் முடிந்த உதவிகளை உக்ரைனுக்குச் செய்து வருகின்றன.

இந்த நிலையில், தனது ஸ்டேட் ஆப் யூனியன் உரையின்போது அமெரிக்க அதிபர் ஜோ பிடன் பேசும்போது உக்ரைனியர்கள் என்று சொல்வதற்குப் பதில் ஈரானியர்கள் என்று கூறி கேலி கிண்டலுக்குள்ளாகியுள்ளார்.

அதிபர் பிடன் பேசும்போது, கீவ் நகரை தனது டாங்குகளால் புடின் சுற்றி வளைத்திருக்கலாம். ஆனால் அவரால் ஒரு போதும் ஈரானியர்களின் இதயங்களை வெல்லமுடியாது என்று கூறினார். இதைக் கேட்டதும் அனைவரும் குழப்பமடைந்தனர். அதை விட முக்கியமாக அவருக்குப் பின்னால் நின்றிருந்த துணை அதிபர் கமலா ஹாரிஸின் முகமே மாறிப் போனது. அவரது உதடுகள் “உக்ரைனியன்” என்று முனுமுனுத்த காட்சியையும் அனைவரும் கண்டனர்.

காடுகள் வழியாக ஊருக்குள் புகுந்து.. உள்ளூர்க்காரர்களாக மாறி.. தாக்கும் ரஷ்ய ராணுவம்!

பிடன் இப்படி வாய் தவறி உளறியது சமூக வலைதளங்களில் வைரலாகி விட்டது “Iranian” என்ற வார்த்தை டிரெண்டாகி விட்டது.

அமெரிக்க அதிபர்களிலேயே மிகவும் வயதான அதிபர் என்ற பெருமை பெற்றவர் பிடன். 79 வயதாகும் இவர் இப்படி வாய் தவறிப் பேசுவது முதல் முறையல்ல. ஆனால் இவருக்கு சிறு வயதிலேயே வாய் தவறிப் பேசுவது இயல்பாக இருந்து வந்தது. இதன் காரணமாக இவருக்கு சிறு வயதிலேயே பேச்சுப் பயிற்சி கொடுத்துள்ளனர். தனது பேச்சு சரியாக வர வேண்டும் என்பதற்காக அவர் நீண்ட உரைகளைப் படிக்கும் பழக்கத்தையும் கொண்டுள்ளார்.

#istandwithputin.. புடினுக்கு பெருகும் ஆதரவு.. அமெரிக்காவை வறுத்தெடுக்கும் இந்தியர்கள்!

கடந்த ஆண்டு கூட அவர் கமலா ஹாரிஸ் பற்றிக் கூறும்போது பிரசிடென்ட் ஹாரிஸ் என்று உளறி விட்டார் என்பது நினைவிருக்கலாம்.

உக்ரைன் குறித்தப் பேச்சின்போது பிடன் கூறுகையில், ரஷ்யப் படையினரை எதிர்த்துப் போரிடுவதற்காக அமெரிக்கப் படைகளை உக்ரைனுக்கு அனுப்பும் எண்ணம் துளியும் இல்லை என்று உறுதியளித்தார். அதேசமயம், உக்ரைனை விட்டு உடனடியாக ரஷ்யப் படைகள் வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்த வேண்டும் என்றும் பிடன் வலியுறுத்தினார்.

இதேபோலத்தான் லிபியா, ஈராக் என பல நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் ஊடுறுவியபோது பல்வேறு நாடுகளும் போரை நிறுத்துமாறு அமெரிக்காவைக் கண்டித்தன என்பது நினைவிருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் அதை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை. தற்போது அதே போல ரஷ்யாவும் செயல்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.