ஊருக்கு திரும்பினால்… உக்ரைனில் சிக்கிய ரஷ்ய வீரர்கள் வெளியிட்ட நடுக்கும் தகவல்


போருக்கு பின்னர் ஊரு திரும்ப நேர்ந்தால் கண்டிப்பாக தாங்கள் கொல்லப்படலாம் என
உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய ரஷ்ய வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் இராணுவத்திடம் சரணடைந்த ரஷ்ய வீரர்கள் சிலர் கீவ் நகரில் ஊடகங்களை சந்தித்துள்ளனர்.
அப்போதே அந்த இராணுவ வீரர், ரஷ்யாவுக்கு திரும்பினால் கட்டாயம் கொல்லப்படுவோம் என்பதை அச்சத்துடன் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு எதிராக போருக்கு புறப்பட்ட நாள் முதல், தாங்கள் இறந்துள்ளதாகவே கருதப்படுவதாகவும்,
சமீபத்தில் பெற்றோரை தொடர்புகொள்ள வாய்ப்பமைந்த போது, இறுதிச்சடங்குகளுக்கான அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளதாக ரஷ்ய வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போருக்கு பின்னர் சரணடைந்துள்ள வீரர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள், அவ்வாறு நேர்ந்தால் சொந்த இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்படுவது உறுதி என அந்த ரஷ்ய வீரர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்ய துருப்புகளிடம் இருந்து 20 வயது மதிக்கத்தக்க ஒரு உக்ரேனிய இளம்பெண்ணை பாதுகாக்க முயன்ற ரஷ்ய அதிகாரி ஒருவர் சக வீரர்களாலையே சுட்டுக்கொல்லப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பு திட்டமிட்டபடி முன்னேறுவதாக ரஷ்ய ஜனாதிபதி புடின் வீர வசனம் பேசினாலும், அவ்வாறான சூழல் இல்லை என்றே உக்ரைன் இராணுவத்திடம் சிக்கிய ரஷ்ய வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

பலர் மனக்குழப்பத்துடன் காணப்படுவதாகவும், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் பலர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, போரைத் தவிர்க்கும் நம்பிக்கையில் சில ரஷ்ய துருப்புக்கள் வேண்டுமென்றே தங்கள் வாகனங்களின் பெட்ரோல் டேங்கில் துளையிட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

மூன்று நாட்களில் முடிந்துவிடும் என கூறப்பட்ட போர் தற்போது இரண்டு வாரங்கள் கடந்தும் நீடிக்கிறது.
ரஷ்ய தரப்பில் 12,000 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் நிர்வாகம் தெரிவித்து வருகிறது.
ஆனால், இதுவரை 498 பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய தரப்பில் கூறப்பட்டு வருகிறது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.