மார்ச் 14ம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு-பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!

புதுச்சேரியில் மார்ச் 14ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 10ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 18-ம் தேதியிலிருந்து மூடப்பட்டன. அதன் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது.

இதற்கிடையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் திறக்கப்படவில்லை.

இந்நிலையில் புதுச்சேரியில் மார்ச் 14ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.