சிவகார்த்திகேயனுக்காக தனுஷ் செய்த காரியம்..குவியும் பாராட்டுக்கள்..!

நடிகர்
சிவகார்த்திகேயன்
இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். முதலில் பல வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்துகொண்டிருந்த சமயத்தில் சில தோல்விகள் அவரின் மார்க்கெட்டை ஆட்டம் காண வைத்தது.

இதைத்தொடர்ந்து கட்டாய வெற்றியை எதிர்நோக்கி காத்திருந்த சிவகார்த்திகேயனுக்கு
டாக்டர்
படம் கைகொடுத்தது. நூறு கோடி வசூல் செய்து மெகாஹிட் ஆனா டாக்டர் படத்தினால் சிவகார்த்திகேயன் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளார்.

கிரிக்கெட் வீரரிடம் பீஸ்ட் அப்டேட் கேட்ட விஜய் ரசிகர்கள்..தீயாய் பரவும் வீடியோ..!

தற்போது இவரின் நடிப்பில் உருவான
டான்
படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் திரைவாழ்க்கையில் மிக முக்கியமானவர்
தனுஷ்
. காமெடியனாக நடித்துக்கொண்டிருந்த சிவகார்த்திகேயனை தன் தயாரிப்பின் மூலம் ஹீரோவாக்கினார் சிவகார்திகேயன்.

எதிர்நீச்சல் படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்ததன் மூலம் அவர் திரைவாழ்க்கையில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. இந்நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் சிவகார்த்திகேயனுக்காக தனுஷ் செய்த உதவியை பற்றி பேசியுள்ளார்.

அதாவது எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் ஒரு பாடலுக்கு நடனமாடியிருப்பார். அப்போது தனுஷ் பிஸியாக ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துவந்தாராம். இருப்பினும் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதால் இரவு முழுவதும் தூங்காமல் பயணம் செய்து அப்பாடலுக்கு நடனமாடியுள்ளார் தனுஷ்.

அப்படத்திற்கு மிகப்பெரிய பலமே பாடல்கள் தான். மேலும் தனுஷ் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்ற செய்தி அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது. எனவே சிவகார்த்திகேயன் ஹீரோவாக வெற்றியடைய வேண்டுமென்ற எண்ணத்தில் தனுஷ் அவ்வளவு கஷ்டங்களை தாண்டி இப்படத்தில் நடனமாடினார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.