கப்பல் போக்குவரத்து கழகத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு ஏன்? – பாரிவேந்தர் எம்.பி

இந்திய கப்பல் போக்குவரத்து கழகத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இந்திய கப்பல் போக்குவரத்து கழக பங்குகளை தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றால் அதன் விவரம் என்ன, விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதா, தனியார் மயமாக்கப்படுவதற்கான காரணம் என்ன, அதனால் எவ்வளவு வருவாய் கிடைக்கும் போன்ற கேள்விகளை பாரிவேந்தர் எம்.பி. எழுப்பியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள மத்திய நிதி அமைச்சகம், பணிகள் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாகவும், விற்பனை செய்யப்படும் தொகை ஏலத்திற்கு பிறகே தெரியவரும் எனவும் பதில் அளித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.