திடீரென ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்…! நடிகை வாணி போஜனுக்கு குவியும் வாழ்த்து…!

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் வாணி போஜன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போயினர்.விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி மெல்ல சின்னத்திரையில் கால்பதித்து, மாயா, ஆஹா, தெய்வமகள்,
லட்சுமி வந்தாச்சு
ஆகிய சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியானார்
வாணிபோஜன்
.

இவர் வெள்ளித்திரையில் அதிகாரம் 79, ஓர் இரவு, போன்ற படங்களில் நடித்திருந்தாலும், இவருக்கு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது என்றால் அது விஜய் சேதுபதி, அசோக் செல்வன், ரித்விகா சிங், உள்ளிட்டோர் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் தான்.இந்த படத்தில் அவர் நடித்த மீரா கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து நடிகை வாணி போஜனுக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவர் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அதை மட்டும் செஞ்சிடாதிங்க நெல்சன்…கதறும் விஜய் ரசிகர்கள்..!

அந்த வகையில் சசிகுமாருக்கு ஜோடியாக பகைவனுக்கு அருள்வாய், விக்ரம் பிரபுவின் பாயும் ஒலி நீ எனக்கு, ஆதவ் கண்ணதாசனின் தாழ் திறவா, பிரபுதேவாவுக்கு ஜோடியாக
ரேக்லா
உள்பட ஏராளமான படங்கள் இவர் கைவசம் உள்ளன.இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் வாணி போஜன், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அதில் தனது வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் வாணி போஜன், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவருக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகை வாணி போஜன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப் போயினர். அதில் அவர் திருமண கோலத்தில் இருந்ததைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாக கருதி வாழ்த்துக்களை தெரிவித்தனர். பின்னர் தான் அது விளம்பர ஷூட்டிங்கிற்காக போட்ட கெட் அப் என தெரியவந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

அடுத்த செய்திஅரப்பிக்குத்து பாடலுக்கு நடனம் ஆடி தெறிக்கவிட்ட பாலிவுட் பிரபலங்கள்…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.