பீஸ்ட்ல செல்வராகவனை பார்த்த அவர் ஞாபகம் வருதே…கலக்கத்தில் விஜய் ரசிகர்கள்..!

விஜய்யின் நடிப்பில் சற்று வித்யாசமாக உருவான திரைப்படம்
பீஸ்ட்
. டார்க் காமெடி படங்களை இயக்குவதில் பெயர்பெற்ற நெல்சனின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

விஜய்
மற்றும்
நெல்சன்
இணையப்போகின்றார்கள் என்ற அறிவிப்பில் இருந்து படத்தின் டைட்டில், படத்தில் நடிக்கும் நடிகர்கள், படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் என அனைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் அதிகரித்தது.

யாஷிகாவின் இந்த முடிவிற்கு என்ன காரணம்? ஷாக்கான ரசிகர்கள்..!

இதைத்தொடர்ந்து இப்படம் தணிக்கை செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த அறிவிப்பை அடுத்து படக்குழுவிடம் ரசிகர்கள் தொடர்ந்து பீஸ்ட் டீசரை கேட்டு அன்பு தொல்லை செய்து வந்தனர். எனவே டீசருக்கு பதிலாக படக்குழு ட்ரைலரை விட்டு ரசிகர்களை மகிழ்வித்தது.

நேற்று மாலை பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியானது. ஒரு பக்கம் ட்ரைலரை பார்த்து அசந்துபோன ரசிகர்கள் நெல்சனை புகழ்ந்து வருகின்றனர். மறுபக்கம் எதிர்மறை விமர்சனங்களும் வழக்கம்போல் வந்துகொண்டுதான் இருக்கின்றது.

பீஸ்ட்

இந்நிலையில் பீஸ்ட் ட்ரைலரில்
செல்வராகவன்
பேசும் வசனங்களை பார்த்த விஜய் ரசிகர்கள் சற்று கலக்கத்தில் இருப்பதாக தெரிகின்றது. ஏனென்றால் விஜய்யை ட்ரைலரில் புகழ்ந்து பேசி விஜய்யின் கதாபாத்திரத்திற்கு பில்டப் கொடுத்து உள்ளார் செல்வராகவன்.

இதை பார்க்கையில் ரசிகர்களுக்கு விவேகம் படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய் ஞாபகம் வருவதாக கருத்து தெரிவிக்கின்றனர்.விவேகம் படத்தில் அஜித்தை புகழ்ந்து பேசி ரசிகர்களை சலிப்படைய செய்திருப்பார் விவேக் ஓபராய்.

செல்வராகவன்

அதுபோலவே ட்ரைலரில் விஜய்யை ஓவராக புகழ்ந்து பேசிய செல்வராகவனை பார்த்த ரசிகர்கள் எங்கு விவேகம் படம் போல ஆகிவிடுமோ என பயந்து வருவது குறிப்பிடத்தக்கது.

BEAST TEASER : ‘வெயிட்டு காட்டிரலாமா’ மாஸ் காட்டும் சன் பிக்ச்சர்ஸ்

அடுத்த செய்திகெட்டிமேளம்…! கெட்டிமேளம்….! கன்ஃபார்ம் ஆன ரன்பீர் கபூர்- ஆலியாபட் திருமணம்…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.