பில் கேட்ஸ், ஜெப் பெசோஸ்-க்கு இப்படி ஒரு பழக்கமா.. உஷாராகும் இந்திய பெண்கள், பாவம் பசங்க..!

பல பில்லியன் டாலர் சொத்து மதிப்பு, உலகம் முழுவதும் வர்த்தகம், தொழில்நுட்பத்தால் உலகையே புரட்டிப்போட்ட பல நிறுவனங்களில் முக்கியமான இரு நிறுவனங்கள் ஜெப் பெசோஸ்-ன் அமேசான் மற்றும் பில் கேட்ஸ்-ன் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள்.

ஜெப் பெசோஸ், பில் கேட்ஸ் ஆகிய இருவரும் அமெரிக்காவின் முக்கியமான இடத்தில் மிகப்பெரிய வீட்டில் 50க்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டு ராஜ வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இருவருக்கும் இருக்கும் ஒரு பழக்கத்தைக் கண்டு தற்போது உலகம் முழுவதும் மக்கள் வியந்துள்ளனர்.

டெஸ்லா-வுக்கு போட்டியாக ரிவியன்.. ஜெப் பைசோஸ் மாஸ்டர் பிளான்..!

தினமும் இரவு

தினமும் இரவு

அவ்வளவு பணத்துடன், பல லட்சம் ஊழியர்களைக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் இவர்கள் தினமும் இரவு பாத்திரம் கழுவுவதை ஒரு முக்கியத் தினசரி பழக்கமாகக் கொண்டு உள்ளனர் என்றால் உங்களால் நம்ப முடியுமா. ஆனா அதுதான் உண்மையாம்.

பாத்திரம் கழுவுவது

பாத்திரம் கழுவுவது

பொதுவாகவே ஆண்களுக்குப் பாத்திரம் கழுவுவது என்றாலே பிடிக்காத ஒன்று, இது பேச்சுலராக இருந்தாலும் சரி, திருமணமானவர்களாக இருந்தாலும் சரி. ஆனால் ஜெப் பெசோஸ் மற்றும் பில்கேட்ஸ் இதைத் தினமும் தவறாமல் செய்யும் ஒரு பழக்கமாகக் கொண்டு இருப்பது பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் வியப்பாக உள்ளது.

ஜெப் பெசோஸ்
 

ஜெப் பெசோஸ்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்-யிடம் 2014ஆம் ஆண்டில், 50 வயதை எட்டிய பிறகு அவரது வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு உள்ளதா என்று கேட்கப்பட்டபோது, எந்த மாற்றமும் இல்லை எப்போதும் போலத் தினசரி வேளைகளைச் செய்வதாகக் கூறினார்.

தினசரி பழக்கம்

தினசரி பழக்கம்

இதற்குப் பதில் அளிக்கப் பில் கேட்ஸ், தான் ஒவ்வொரு இரவும் பாத்திரங்களைக் கழுவுவதைப் பழக்கமாகக் கொண்டு உள்ளேன். மற்றவர்கள் பணியைச் செய்ய முன்வந்தாலும், அதைத் நானே செய்வதையே விரும்புவேன் எனக் கூறினார்.

கணவன் மனைவி

கணவன் மனைவி

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் ஜெப் பெசோஸ், பில் கேட்ஸ்-ஏ வீட்டு வேலைகளையும், பாத்திரம் கழுவும் நிலையில், இனி மனைவிமார்கள் கணவர்களுக்குத் தினமும் பாத்திரம் கழுவ உத்தரவு போட்டாலும் ஆச்சரியம் இல்லை..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Jeff Bezos, Bill Gates both have this habit of Every Night Before Going to Bed

Jeff Bezos, Bill Gates both having this habit Every Night Before Going to Bed பில் கேட்ஸ், ஜெப் பெசோஸ்-க்கு இப்படி ஒரு பழக்கமா.. உஷாராகும் இந்திய பெண்கள், பாவம் பசங்க..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.