லாகூர் : பாகிஸ்தானில், இலங்கை நாட்டவரை படுகொலை செய்த ஆறு பேருக்கு, பாக்., நீதிமன்றம் மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரில், கடந்த டிசம்பரில், ஒரு ஆடை தயாரிப்பு தொழிற்சாலைக்குள் புகுந்த, 800க்கும் மேற்பட்ட நபர்கள், அந்த ஆலையை சூறையாடினர்.
மேலும், அதன் பொது மேலாளராக வேலை பார்த்த இலங்கையை சேர்ந்த பிரியந்தா குமாரா, 47, என்பவரை அடித்துக்கொன்றனர். பின் அவரின் உடலை தீவைத்து எரித்தனர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த சம்பவத்தில் தொடர்புடைய, 80 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து விசாரித்து வந்த லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம், முக்கிய குற்றவாளிகளான ஆறு பேருக்கு, நேற்று மரண தண்டனை விதித்தது.
ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும், மீதமுள்ள, 67 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது. இவர்கள் தவிர ஒன்பது சிறார் குற்றவாளிகள் குறித்த விசாரணை முடிவடையாததால் அவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்படவில்லை.
லாகூர் : பாகிஸ்தானில், இலங்கை நாட்டவரை படுகொலை செய்த ஆறு பேருக்கு, பாக்., நீதிமன்றம் மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளது.nsimg3010587nsimgநம் அண்டை நாடான
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.