100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வெளியில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், கணிக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே இந்தியாவில் மின்சாரத்திற்கான தேவை அதிகரித்து உள்ளது. இந்தத் திடீர் தேவைக்குத் தயாராகாத மின்சார உற்பத்தி தளத்தால் தற்போது 12 மாநிலத்தில் மின்சாரத் தட்டுப்பாடு மிகவும் மோசமாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த 12 மாநிலத்தில் தமிழ்நாடும் ஒன்று என்பதால் இதன் பாதிப்பு ஏப்ரல் 20ஆம் தேதி இரவில் தெரியத் துவங்கியுள்ளது.
உண்மையில் என்ன பிரச்சனை..? ஏன் நிலக்கரி தட்டுப்பாடு..? இதை எப்படிச் சரி செய்வது..?
சிக்கலில் இந்தியா.. நிலக்கரி விலை உயர்வால் பல துறைகள் தவிப்பு.. விலை இன்னும் அதிகரிக்கலாம்?

நிலக்கரி
இந்தியா தனது மொத்த மின்சாரத் தேவையில் 75 சதவீதத்தை நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மூலம் தீர்த்து வருகிறது. இந்நிலையில் உள்நாட்டு மின் உற்பத்தி நிலையங்களில் சராசரி நிலக்கரி இருப்பு அளவு ஏப்ரல் மத்தியில் வெறும் ஒன்பது நாட்களாகக் குறைந்துள்ளது.

8 நாட்கள்
இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத சரிவாகும், பொதுவாக மத்திய அரசு மின்சார உற்பத்தி தளத்தில் சராசரியாக 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி வைத்திருக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யும் நிலையில் தற்போது 8 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே உள்ளது.

அக்டோபர் 2021, மீண்டும் ஏப்ரல் 2022
இந்தியா கடைசியாகக் கடுமையான நிலக்கரி பற்றாக்குறையை எதிர்கொண்ட அக்டோபர் 2021ல் 1.1% ஆக இருந்த மின் பற்றாக்குறை, தற்போது 1.4% ஆக அதிகரித்துள்ளது. பீகார், ஜார்கண்ட், ஹரியானா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் தலா 3%க்கும் அதிகமான மின் பற்றாக்குறையும், ஆந்திரப் பிரதேசத்தில் 8.7% மின் பற்றாக்குறையும் நிலவுகிறது.

ஏப்ரல் 17 நிலவரம்
மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) தரவுகள் படி ஏப்ரல் 17 ஆம் தேதி நிலவரப்படி, 173 மின்சார உற்பத்தி ஆலைகளில், 101 ஆலைகளில் நிலக்கரி கையிருப்பு மிகவும் மோசமான அளவில் உள்ளது. இந்த மொத்த பிரச்சனைக்கும் நிலக்கரி தான் பிரச்சனை.

கோல் இந்தியா
இந்தியாவின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 80% அரசு நிறுவனமான கோல் இந்தியா கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், ஏப்ரல் முதல் பாதியில் உற்பத்தி அளவு 27% அதிகரித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தது, உற்பத்தி அதிகரித்தது, கோடைக் காலம் தாக்கம் ஆகியவற்றைச் சரியான முறையில் கணிக்காமல் நிலக்கரியைக் குறைவான அளவில் உற்பத்தி செய்துள்ளது.

கோல் இந்தியா தவறு
இதனாலேயே தற்போது மின்சார உற்பத்தி தளத்தில் நிலக்கரிக்குக் கடுமையாகத் தட்டுப்பாடு நிலவுகிறது. தற்போது கோல் இந்தியா மின்சார உற்பத்தி அல்லாத பிற துறைக்குச் சப்ளை செய்யவதை நிறுத்தியுள்ளது. இதேபோல் உற்பத்தி அளவையும் அதிகரித்துள்ளது.
who is responsible for power storage? Why coal stock falls suddenly?
who is responsible for power storage? Why coal stock falls suddenly? மின் வெட்டுக்கு யார் காரணம்.. எப்போது சரியாகும்..?