நடிகர் சுந்தர்சியின் பட்டம்பூச்சி படத்தின் டீசர் குறித்த அப்டேட்…!

சுந்தர் சி
நடிப்பில் உருவாகியுள்ள ‘பட்டாம்பூச்சி’ படத்தின்
டீசர்
குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.வீராப்பு,தில்லு முல்லு உள்ளிட்ட படங்களை இயக்கிய
பத்ரி
இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பட்டாம்பூச்சி.

அவ்னி டெலி மீடியா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் முதல் முறையாக நடிகர்
ஜெய்
மற்றும் இயக்குனர் சுந்தர் சி இணைந்து நடித்துள்ளனர். இதில் சுந்தர் சி நேர்மையான போலீசாகவும், ஜெய்
சைக்கோ
கொலைக்காரனாகவும் நடித்துள்ளனர்.

‘டான்’ படத்தின் தாறுமாறு அப்டேட்: உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.!

நவ்நீத் இசையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு
இசக்கி கிருஷ்ணசாமி
ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். இந்த படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ்,
இமான் அண்ணாச்சி
உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சைக்கோ த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த படம் வரும் மே 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இப்படத்தின்
மோஷன் போஸ்டர்
வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sila Nerangalil Sila Manithargal – மனசு நெறஞ்சுருக்கு ; ரொம்ப சந்தோசம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.