குஷ்பு மருத்துவமனையில் அனுமதி

நடிகையும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான குஷ்பு சமூக வலைத்தளங்களில் பிசியாக செயல்படக்கூடியவர். சமீபத்தில் அரசியல் பயணமாக டில்லி சென்று விட்டு திரும்பி இருந்தார். இந்த நிலையில் அவர் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் குணமடைந்து விடுவதாகவும் படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.

ஆனால் தனக்கு என்ன பிரச்சினை என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை. அவரது ரசிகர்கள் பதிவின் கீழ் வெளியிட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள குஷ்பு. “லேசான பிரச்சினைதான் திடீரென நடந்து விட்டது. இப்போது நலமாக இருக்கிறேன். விரைவில் வீடு திரும்புவேன்” என்று கூறியிருக்கிறார்.

வீட்டில் நடக்கும்போது வழுக்கி விழுந்ததில் அவர் காலில் அடிபட்டிருப்பதாகவம், அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.