
பணமோசடி புகார்: 'மன்னர் வகையறா' தயாரிப்பாளர் கைது
சென்னை: நடிகர் விமல் நடிப்பில் வெளிவந்த ‛மன்னர் வகையறா' படம் தொடர்பாக தயாரிப்பாளர் சிங்காரவேலன் – விமல் இடையே பிரச்னை இருந்து வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே ரூ.5 கோடி பண மோசடி செய்துவிட்டதாக இருவரும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து வந்தனர். இந்த நிலையில் தனது பெயரை பயன்படுத்தி தயாரிப்பாளர் சிங்காரவேலன் பணமோசடி செய்ததாக நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில், தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டுள்ளார்.