
நரகாசுரன் படத்தை வாங்குமாறு எலான் மஸ்க்கிடம் கார்த்திக் நரேன் கோரிக்கை
கோலிவுட்டில் இளம் இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் நரேன், 'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கினார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் ரிலீசுக்கு தயாராகி பல ஆண்டுகள் ஆன பின்னரும் ஒரு சில பொருளாதார பிரச்சினை காரணமாக ஐந்து ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருக்கிறது .
ஆனால் அந்த படத்தை அடுத்து கார்த்திக் நரேன், 'மாபியா', 'மாறன்' ஆகிய படங்களையும் இயக்கி முடித்து, அந்த படங்கள் வெளியாகிவிட்டன. இந்த நிலையில் இவர் தனது சோசியல் மீடியா பேஜ் மூலம் டுவிட்டர் ஓனர் எலான் மஸ்க்கிடம் தன்னுடைய 'நரகாசுரன்' படத்தை வாங்கி ரிலீஸ் செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கை குறித்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இந்த படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முயற்சிப்பாரா? என்ற ஆருட குரல் கேட்க தொடங்கி இருக்கிறது .