Thanjavur ApparGuruPoojai accident: தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் நடைபெற்ற அப்பர் குருபூஜை விழாவின் போது, தேர்பவனியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்ததில் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயி சுவாமிநாதன் (56), முன்னாள் ராணுவ வீரர் பிரதாப் (36) , கோயில் பூசாரி ஆத்தா செல்வம் (56), சிறுவன் ராஜ்குமார் (14), சிறுவன் பரணிதரன் (13), விவசாயி அன்பழகன் (60), அவரது மகன் ராகவன் (24), ஏணி படிக்கட்டு செய்யும் தொழிலாளி நாகராஜன் (60), மோகன் (22), சந்தோஷ் (15), கோவிந்தராஜ் (45) ஆகிய 11 பேரும் களிமேட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.