பெங்களூரு : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பெங்களூரு வருவதால், பா.ஜ., வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இரண்டு நாள் அரசு முறை பயணமாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பெங்களூரு வருகிறார். கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் நாளை நடக்கும் இரண்டாவது சீசன் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.
முன்னதாக, அவருக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை மதிய விருந்து ஏற்பாடு செய்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அமைச்சரவை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளார்.குறிப்பிட்ட முக்கிய தலைவர்கள் மட்டுமே அமித் ஷாவுடன் விருந்தில் பங்கேற்பதற்கு, முதல்வர் அழைப்பு விடுத்துள்ளதாக பா.ஜ., வட்டாரங்களில் பேசப்படுகிறது.இந்நிலையில், அமைச்சர் பதவிக்கு காத்திருப்போர், தங்கள் இஷ்ட தெய்வங்களை கும்பிட்டு வருகின்றனர். பதவிக்காக தங்கள் ‘காட்பாதர்’களிடம் லாபியில் ஈடுபட்டுள்ளனர்.அமித் ஷா வருகையால் மொத்த பா.ஜ., வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே இருப்பதால் 150 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று கடந்த மாதம் கர்நாடகா வந்த போது இலக்கு நிர்ணயித்திருந்தார். அது குறித்தும் அவர் ஆலோசிக்க உள்ளார்.வாகனம் நிறுத்த தடைபெங்களூரு போக்குவரத்து போலீசார் வெளியிட்ட அறிக்கை:மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பெங்களூரு வருகிறார்.
இதை முன்னிட்டு, மல்லேஸ்வரம் 18வது குறுக்கு சாலையின், சம்பிகே சாலை, காபி டேவிலிருந்து, மார்கோசா 18வது குறுக்கு சாலை வரை, மார்கோசா சாலையின், 18 வது குறுக்கு சாலையிலிருந்து, 15வது குறுக்கு சாலை வரை.மல்லேஸ்வரம் எட்டாவது கிராஸ், மார்கோசா 8வது குறுக்கு சாலையிலிருந்து, சந்துாஸ் ஹோட்டல் வரை, மல்லேஸ்வரம் 15வது குறுக்குசாலை, சம்பிகே சாலையின் நான்காவது பிரதான சாலை வரை, இங்கிருந்து டெம்பிள் ஸ்ட்ரீட் வரை, மே 5ல் வாகன நிறுத்தம் தடை செய்யப்படுகிறது.மல்லேஸ்வரம் 4வது பிரதான சாலை, சம்பிகே நான்காவது பிரதான சாலையின், 15வது குறுக்கு சாலையில் இருந்து, நான்காவது பிரதான சாலை, 18வது குறுக்கு சாலை ஜங்ஷன் வரை, டெம்பிள் ஸ்ட்ரீட் ஜங்ஷனில் இருந்து, 11 குறுக்கு சாலை வரை வாகனங்கள் நிறுத்தக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Advertisement