உக்ரைனில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட ரஷ்ய தளபதி: வெளிவரும் பகீர் பின்னணி


வெற்றியை உறுதி செய்ய உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான தளபதி ஒருவர், அவசர அவசரமாக உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான வெற்றியை உறுதி செய்ய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினால் உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர் தளபதி Valery Gerasimov.
இந்த நிலையில், உக்ரைன் கார்கிவ் பகுதியில் அமைந்துள்ள Izyum நகரில் குண்டுவெடிப்பில் அவர் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் காயமடைந்துள்ள தளபதி Valery Gerasimov உடனடியாக ரஷ்யா திரும்பியதாக தெரிய வந்துள்ளது.
ரஷ்ய படையெடுப்பை தொடங்கிய நாள் முதல் Izyum பகுதியானது கடுமையான தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது.

கார்கிவ் பிராந்தியத்தை உடனடியாக கைப்பற்றும் நோக்கில் விளாடிமிர் புடின் தமது நம்பிக்கையான தளபதியை குறித்த பகுதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.
இந்த நிலையிலேயே தளபதி Valery Gerasimov காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், போர்க்களத்தில் இருந்து வெளியேறி, மேலதிக சிகிச்சைக்காக அவர் ரஷ்யா திரும்பும் நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ரஷ்ய மேஜர் ஜெனரல் ஆண்ட்ரி சிமோனோவ், கார்கிவில் கொல்லப்பட்ட தகவல் வெளியான ஒரு நாளுக்குப் பிறகு விளாடிமிர் புடினின் முக்கிய தளபதி Valery Gerasimov காயங்களுடன் உயிர் தப்பிய தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர், உக்ரைன் துருப்புகளால் கொல்லப்படும் 9வது தளபதி ஆண்ட்ரி சிமோனோவ் என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.