கோடை வெயிலிலிருந்து தப்பிக்கவும், மே தின விடுமுறையை கொண்டாடவும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதகைக்கு சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். உதகையில் அவ்வப்போது லேசான சாரல் மழையும் பெய்து நீலகிரி மாவட்டத்தை குளிர்வித்து வருகிறது.
உதகையில் குவிந்துள்ள சுற்றுலா பயணிகளால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்காவில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இங்குள்ள அனைத்து ஹோட் டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. அறைகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்ட போதிலும், அனைத்து லாட்ஜ்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது.
சுற்றுலா பயணிகளின் வாகனங்களால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் உதகை நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உதகையில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்களில் உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.