டெல்லி: எந்த ஒரு தனி நபரையும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா தடுப்பூசி கட்டாயம் என பல்வேறு மாநில அரசுகள் விதித்த அரசாணைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சில நிபந்தனைகளை உருவாக்கி அதன் கொள்கைகளை வகுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
