தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 52 சவரன் நகை மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி பகுதியில் சுடலைமுத்து-பேச்சியம்மன் தம்பதியின் வீட்டில் பீரோவில் இருந்த 52 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளை போய் உள்ளது.
இது குறித்து, காவல்நிலையத்தில் அவர்கள் அளித்த புகார் அளித்தனர். இதனை அடுத்து நேரில் வந்து ஆய்வு செய்த போலீசார், விரைவில் குற்றவாளிகளை பிடித்து நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே வண்ணாங்குளம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மளிகை கடையில் ரூ. 25 ஆயிரம், மளிகை பொருட்கள் திருடு பொய் உள்ளது.
இன்று காலை மளிகை கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைந்ததை கண்டு மணி அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.