மது அருந்தாதே என கூறியதால் இளைஞரை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூரிவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனது நண்பருடன் திரௌபதி அம்மன் கோவில் அருகே மது அருந்தி கொண்டிருந்தார். இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் கோவிலில் மது அருந்தாதீர்கள் என கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏறட்டது.
இதனால், ஆத்திரமடைந்த முருகன் தனது நண்பரான திருமுல்லைவாயலை சேர்ந்த தினேஷ் பாபு என்பவருக்கு அழைத்து கார்த்திக்கை கொலை செய்ய கூறியுள்ளார். இதனை அடுத்து, தினேஷ் சரண், கலைச்செல்வன் , மிட்டாய் ரஃபி ஆகியோருடன் முருகன் சரன்ராஜ் ஆகிய 6 பேரும் சேர்ந்துக்கொண்டு கார்த்திக்கை வெட்டியுள்ளனர்.
ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.