மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வலிவலம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக தமிழ்ச்செல்வன்என்பவர் பணியாற்றி வந்தார் அவர் அங்கு படிக்கும் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும் அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மகளின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுதல் அவரின் தாய் இதுகுறித்து கேட்டபோது எனக்கு நடந்த கொடுமைகளை சிறுமி அழுது கொண்டே கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த தாய் இதுகுறித்து வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனை கண்ட மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் நேராக சிறுமியிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் தமிழ்ச்செல்வன் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.