
வைரலாகும் மீரா கிருஷ்ணனின் த்ரோபேக் புகைப்படம்
மலையாள நடிகையான மீரா கிருஷ்ணன், தற்போது தமிழ் சின்னத்திரையில் முன்னணி அம்மா நடிகையாக வலம் வருகிறார். கிட்டத்தட்ட தமிழின் அனைத்து சேனல்களிலும் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் மீரா கிருஷ்ணன் நடித்து வருகிறார். சீரியலில் என்னதான் அம்மா நடிகையாக இருந்தாலும், சமூக வலைதளத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்களும், பதிவுகளும் இளம் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் இருக்கும். சமீபத்தில் தனது மகளுடன் மீரா நடனமாடி வெளியிட்ட வீடியோ மிகவும் வைரலானது. இந்நிலையில், கல்லூரி படிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தற்போது த்ரோபேக் புகைப்படமாக மீரா கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். அதைபார்த்துவிட்டு 'இவங்க அப்பவே அப்படி இருக்காங்களே' என ரசிகர்கள் வழிந்து வருகின்றனர்.