இரண்டாம் உலகப் போர் நினைவு தினம் அனுசரிப்பு| Dinamalar

புதுச்சேரி : இரண்டாம் உலகப்போர் நிறைவு பெற்றதன் 77ம் ஆண்டு நினைவு நாள், புதுச்சேரியில் நேற்று கடைபிடிக்கப்பட்டது.கடற்கரை சாலையில் உள்ள போர் வீரர் நினைவுத் துாணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.இரண்டாம் உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா, பிரான்ஸ் நாட்டின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரெஞ்சு துணை துாதரக தலைவர் கரோல் ஜோஸ், அரசு சார்பில் கலெக்டர் வல்லவன், டில்லியில் உள்ள பிரெஞ்சு துாதரக பாதுகாப்பு துணை தலைவர் கொலோனெல் நோர்பெர் கேன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.அயலக வாழ் பிரெஞ்சு குடிமக்களுக்கான உள்ளூர் பிரதிநிதிகள் பலராமன் பிஷா, பிரதீபன் சிவா, பிரெஞ்சு முன்னாள் ராணுவ வீரர்கள், புதுச்சேரியில் வாழும் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றோர் உள்படபலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.