புடினை ஆட்சியிலிருந்து அகற்றும் திட்டம் தயார்… நாள் குறித்தாயிற்று என்கிறார் உளவுத்துறைத் தலைவர்

புடினுடைய ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம் ஏற்கனவே துவங்கியாயிற்று என்று கூறியுள்ள உக்ரைன் உளவுத்துறைத் தலைவர், ஆகத்து மாதத்தில் அவர் பதவியிலிருந்து தூக்கியெறியப்படுவார் என்றும் கூறியுள்ளார்.

Major General Kyrylo Budanov (36) இது குறித்துக் கூறும்போது, இந்த கோடையின் இறுதியில் போரில் ஒரு திருப்புமுனை உருவாகும் என்றும், புடின் தன் பதவியிலிருந்து தூக்கியெறியப்படுவார் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகத்து மாதத்தின் இரண்டாவது பகுதியில் போரில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என்று கூறும் General Budanov, இந்த ஆண்டின் இறுதிவாக்கில் போரின் தீவிரம் குறைந்திருக்கும் என்றும், அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவின் தலைமையில் மாற்றம் ஏற்படும், அதற்கான நடைமுறைகள் ஏற்கனவே துவங்கியாயிற்று என்றும் கூறுகிறார்.

புடினை ஆட்சியிலிருந்து அகற்றும் திட்டம் தயார்... நாள் குறித்தாயிற்று என்கிறார் உளவுத்துறைத் தலைவர்

அதன் விளைவாக, மீண்டும் உக்ரைன் எங்கள் அனைத்து பிராந்தியங்களிலும் வலிமை பெறும் என்கிறார் அவர்.

ரஷ்ய ஜனாதிபதியான புடினுக்கு இரத்தப்புற்றுநோய் என்றும், அவர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிரெம்ளின் வட்டாரத்துக்கு நெருக்கமான ரஷ்ய செல்வந்தர் ஒருவர் கூறியுள்ள நிலையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

புடினை ஆட்சியிலிருந்து அகற்றும் திட்டம் தயார்... நாள் குறித்தாயிற்று என்கிறார் உளவுத்துறைத் தலைவர்

புடினை ஆட்சியிலிருந்து அகற்றும் திட்டம் தயார்... நாள் குறித்தாயிற்று என்கிறார் உளவுத்துறைத் தலைவர்

புடினை ஆட்சியிலிருந்து அகற்றும் திட்டம் தயார்... நாள் குறித்தாயிற்று என்கிறார் உளவுத்துறைத் தலைவர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.