வல்வெட்டித்துறை மண்ணை விழுந்து வணங்கி ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரணி (Photos)


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக விழுந்து வணங்கி முள்ளிவாய்க்கால்
பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

மே 18 இல் முள்ளிவாய்க்காலில் அப்பாவி தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாக
கொன்றொழித்த சிங்கள பேரினவாதத்தின் கறைபடிந்த நாளான முள்ளிவாய்க்கால் நினைவு
வாரம் கடந்த 12ஆம் திகதி உணர்வுபூர்வமாக தமிழர் தாயகப் பகுதிகளில் ஆரம்பித்து
வைக்கப்பட்டது.

வல்வெட்டித்துறை மண்ணை விழுந்து வணங்கி ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரணி (Photos)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த ஊரான
வல்வெட்டித்துறையில் இருந்து இன்று ஆரம்பிக்கப்பட்ட பேரணியானது நடைபவனியாக
பருத்தித்துறை நெல்லியடி, அச்சுவேலி, நல்லூர் கந்தசாமி ஆலயம் யாழ். பல்கலைக்கழகம் ஊடாக யாழ். நகரத்தை வந்தடையவுள்ளது.

பின்னர் யாழ் நகரத்திலிருந்து நாவற்குழி, கைதடி, சாவகச்சேரி, கொடிகாமம் ஊடாக
கிளிநொச்சியைச் சென்றடைந்து அங்கிருந்து மே 18 ஆம் திகதி
முள்ளிவாய்க்கால் நினைவிடத்தைச் சென்றடைய உள்ளது.

வல்வெட்டித்துறை மண்ணை விழுந்து வணங்கி ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரணி (Photos)

வல்வெட்டித்துறை மண்ணை விழுந்து வணங்கி ஆரம்பிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரணி (Photos)Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.