நான் சைமண்ட்ஸை காப்பாற்ற முயன்றேன், ஆனால்.. உள்ளூர்வாசி கூறிய முக்கிய விடயம்!


உள்ளூர்வாசி ஒருவர் ஆண்ட்ரு சைமண்ட்ஸை காப்பாற்ற முயன்று பலனளிக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆண்ட்ரு சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார்.

46 வயதான சைமண்ட்ஸ் குயின்ஸ்லேண்ட் மாகாணத்தில் டவுன்ஸ்வில்லே நகரில் தனியாக காரில் பயணித்தபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த நிலையில், விபத்து நிகழ்ந்தபோது சம்பவ இடத்தில் இருந்த உள்ளூர்வாசி ஒருவர், சைமண்ட்ஸை காப்பாற்ற முயன்றதாக தெரிவித்துள்ளார்.

Waylon Townson என்ற அந்த நபர், கார் விபத்துக்குள்ளான சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்துள்ளார். நபர் ஒருவர் காரில் சிக்கியிருப்பதை கவனித்து அவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

நான் சைமண்ட்ஸை காப்பாற்ற முயன்றேன், ஆனால்.. உள்ளூர்வாசி கூறிய முக்கிய விடயம்!

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அவர் காரில் சிக்கிக் கொண்டிருந்ததால் நான் அவரை வெளியில் இழுக்க முயன்றேன். பின்னர் அவருக்கு சி.பி.ஆர் முதலுதவி அளித்தேன், மேலும் அவரது நாடித்துடிப்பை பரிசோதித்தேன். ஆனால் அவரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை’ என தெரிவித்துள்ளார். 

நான் சைமண்ட்ஸை காப்பாற்ற முயன்றேன், ஆனால்.. உள்ளூர்வாசி கூறிய முக்கிய விடயம்!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.