குத்தாட்டத்திற்கு தயாராகும் புதிய பாடல்.. ’எஸ்கே 20’ டான்ஸ் ரிகர்சலில் சிவகார்த்திகேயன்!

’எஸ்கே 20’ படத்தின் டான்ஸ் ரிகர்சலில் கலந்துகொண்டார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் லைகாவுடன் இணைந்து தயாரித்து நடித்திருந்த ‘டான்’ கடந்தவாரம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைதொடர்ந்து ’ஜதிரத்னலு’ இயக்குநர் அனூதிப்புடன் இணைந்து தமிழ் – தெலுங்கில் உருவாகும் பைலிங்குவல் படத்தில் நடித்து வருகிறார். இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோசப்கா நடிக்கிறார். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு சத்யராஜ் மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார். ’டான்’ வெளியீட்டையொட்டி தொடர்ந்து தமிழகம் மற்றும் ஹைதராபாத்தில் தியேட்டர்களுக்கு விசிட் செய்துவந்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ‘எஸ்கே20’ படத்தின் பாடல் காட்சிக்காக டான்ஸ் ரிகர்சலில் பங்கேற்றுள்ளார்.

image

காதல் பாடலாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஏனென்றால், டான்ஸ் ரிகர்சலில் அவருடன் நாயகி மரியா ரியாபோசப்காவும் இணைந்துள்ளார். இப்பாடலுக்கு சதீஷ் நடனம் அமைக்கிறார். சமீபத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிளையாய் வரும் அதே சதீஷ்தான்.

image

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் ‘எஸ்கே21’ படத்தில் நடிக்கிறார். நாயகியாக சாய் பல்லவி இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.