கருணாநிதி சிலை திறப்பில் வெங்கைய நாயுடு… பாஜக-வுடன் திமுக-வுக்கு உறவு மலர்கிறதா?

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்து விட்டால், அதன் பின்னர் அக்கட்சியின் பாஜக எதிர்ப்பு நிலை மாறிவிடும் என்றும், பாஜகவுடன் இணக்கமாகவே போகும் என்றும் திமுக எதிர்ப்பாளர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், ‘திராவிட மாடல் ஆட்சி’ முழக்கம், ‘ஒன்றிய அரசு என்ற சொல்லாடல் போன்றவற்றை வைத்து தங்களது பாஜக எதிர்ப்பு நிலையை முதல்வர் மு.க. ஸ்டாலினும், திமுகவினரும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனாலும் டெல்லியில் திமுக அலுவலக திறப்புக்கு பாஜகவினரை அழைத்தது, கோயில் விஷயங்களில் காட்டும் ஈடுபாடு, பல்லக்கு சர்ச்சையில் பின் வாங்கியது, பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறிக்குத் தடை போன்றவையெல்லாம் பா.ஜ.க-விடம் திமுக பம்முவதாக விமர்சனங்கள் எழுந்தன.
“எங்களை பாஜகவின் ‘பி’ டீம் என்றார்கள்… இப்போ யார் ‘பி’ டீம்..?” என நாம் தமிழர் கட்சியினர் நக்கலடிக்கும் நிலையில், கருணாநிதி சிலை திறப்பில் வெங்கைய நாயுடு அழைக்கப்பட்டது, ‘பாஜக-வுடன் திமுக-வுக்கு உறவு மலர்கிறதா?’ என்ற அளவுக்கு சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ஆளும் தரப்பிலும், அரசியல் விமர்சகர்களும் இது குறித்து சொல்வது என்ன…? க்ளிக் செய்யவும்
1973 திண்டுக்கல் இடைத்தேர்தல்; ஆறு மாத குழந்தை அதிமுக வெற்றியடைந்த சரித்திரம்!

1973-ல் நடந்த திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல், தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய தேர்தலாக அமைந்துவிட்டது. எம்.ஜி.ஆர் தலைமையில் புதிதாக உருவான அ.தி.மு.க என்கிற இயக்கம், அந்த இடைத்தேர்தலில் வென்று தி.மு.க-வுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அது நடந்து இன்றுடன் 49 ஆண்டுகள் ஆகிவிட்டது.
விழுப்புரம்: பெண் அதிகாரி Vs விசிக மாவட்ட செயலாளர்; உச்சக்கட்ட வாக்குவாதம் – பின்னணி என்ன?

விழுப்புரம் வடக்கு மாவட்ட வி.சி.க செயலாளராக இருக்கும் சேரன், அரசு ஒப்பந்ததாரராகவும் செயல்பட்டு வந்துள்ளார் . இந்நிலையில், விழுப்புரம் தாட்கோ அலுவலக செயற்பொறியாளர் அன்பு தேவகுமாரியிடம்… இவர், ஆதரவாளர் சிலருடன் சென்று தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகளும்; பதிலுக்கு அந்த பெண் செயற்பொறியாளர், ஒருமையில் பேசி மேசையின் மீது இருந்த ஒரு பொருளை ஆக்ரோஷமாக எடுக்கும் மற்றொரு வீடியோ காட்சியும்… சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
வேகமாகப் பரவிவரும் குரங்கு காய்ச்சல்; 9 நாடுகளில் தீவிரம்; அவசர கூட்டத்தை கூட்டிய WHO!

உலகத்தையே புரட்டிப்போட்ட கோவிட் தொற்றே இன்னும் ஒழிந்தபாடில்லை. அதற்குள் வித விதமான காய்ச்சல்கள் உருவெடுத்து மக்களை அச்சத்திற்குள் தள்ளிக்கொண்டிருக்கும் சூழலில், லேட்டஸ்ட்டாக பரவிவரும் குரங்கு காய்ச்சல், மக்களைக் குலை நடுங்கச் செய்துகொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் வேகமாகப் பரவி வரும் இந்தத் தொற்று
தனுஷ் அனுப்பிய ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு நோட்டீஸ்… மதுரை தம்பதியரின் பதில் என்ன?

மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி கதிரேசன் – மீனாட்சி. நடிகர் தனுஷ் எங்களின் மகன்தான் என்றும், அவர் மாதந்தோறும் பராமரிப்புத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த நிலையில், தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயன்றதாகவும், நீதிமன்றங்களில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்ததாகவும் அந்தத் தம்பதியினர் நோட்டீஸ் அனுப்பினர்.
மே 21, 1991 – ராஜீவ் காந்தியின் கடைசி பிரஸ்மீட்!

“ராஜீவ் காந்தி இரவு எங்கு தங்குகிறார் என்பது பற்றி அன்பரசு விசாரித்தார். அப்போது வாழப்பாடி…
” இவர்களுக்கு விஷயமே புரியவில்லை… விளக்கிச் சொன்னாலும் தப்பாக எடுத்துக் கொள்கிறார்கள்.
தலைவரைத் தங்க வைக்க இவர்கள் என்ன ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று விசாரித்தபோது, எனக்கு வந்த கோபம் சொல்லி மாளாது. முன்னாள் பிரதம மந்திரியும், வருங்கால பிரதம மந்திரியுமான அவரைத் தங்க வைக்க இவர்கள் ஏற்பாடு செய்த லட்சணம்…” எனக் கோபத்தில் கொந்தளித்தார்.
ராஜீவ் காந்தியின் கடைசி பிரஸ்மீட் அன்று என்ன நடந்தது..? க்ளிக் செய்யவும்….