பாகல்கோட் : தொழிலதிபரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெண் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.உடுப்பியைச் சேர்ந்தவர் அசோக் ஷெட்டி, 45; தொழிலதிபரான இவர், சில நாட்களுக்கு முன் தனது மொபைல் போனில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்தார். அதன் மூலம் பலரிடம் தொடர்பு கொண்டு, சாட்டிங் செய்து பேசி வந்தார்.அதுபோல், பாகல்கோட்டின் பெண் ஒருவரிடமும் பேசினார்.
இருவரும் தங்கள் மொபைல் எண்களை பரிமாறி கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் அசோக் ஷெட்டியிடம் இருந்து அவரது புகைப்படங்களை, அப்பெண் பெற்றார்.சிறிது நாட்கள் கழித்து, அந்த பெண், ’25 ஆயிரம் ரூபாய் தர வேண்டும்; இல்லையென்றால் தன்னிடம் உள்ள புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன்’ என மிரட்டினார்.இந்த மிரட்டலுக்கு பணியாத தொழிலதிபர், பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் அந்த பெண், தொழிலதிபரின் நண்பர்கள், அவரது வாட்ஸ் -ஆப் குரூப்களில் அவரது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டார்.அதிர்ச்சி அடைந்த அசோக் ஷெட்டி, பாகல்கோட் நகர போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
Advertisement