நம் தாத்தா காலத்தில் அம்பாசிடர் கார் வைத்திருந்தாலே ஒரு கெத்து தான். சொல்லப்போனால் அது அவர்களின் சிறந்த அடையாளமாக பார்க்கப்பட்டது. அப்படிப்பட்ட அம்பாசிடர் கார், பல புதிய ரக கார்களுக்கு மத்தியில் தன் பொலிவினை இழக்கத் தொடங்கியது.
இதன் காரணமாக கடந்த 2014ல் தனது உற்பத்தியினை முற்றிலும் நிறுத்தியது அம்பாசிடர்.
எனினும் அம்பாசிடர் பிராண்டை வாங்கிய புயூஜியோ, ஹிந்த் மோட்டார் பைனான்ஷியல் கார்ப்பரேஷனுடன் இணைந்து, மீண்டும் இந்த காரை தயாரிக்க உள்ளது.
7 வருடமாக சேர்த்தது வெறும் 8 மாதத்தில் பறிபோனது: இந்திய பங்குச்சந்தை..!

டெக்னாலஜி வசதிகள் இல்லை
ஆக இன்னும் கொஞ்ச காலத்தில் மீண்டும் இந்திய சாலைகளில் அம்பாசிடர் கார் ஓடலாம். அம்பாசிடர் கார் இந்தியாவில் மிக பழைமையான விருப்பமான கார்களில் ஒன்றாகும். இது கடந்த 1958ல் தொடங்கி, 2014ல் முடிவுக்கு வந்தது. இது பல புதிய ரக கார்களுக்கு மத்தியில், மேம்படுத்தப்பட்ட டெக்னாலஜிகள் என பல வசதிகள் இன்மையால் இன்றைய தலைமுறையினரிடம் செல்லுபடியாகவில்லை.

சென்னையில் தயாரிப்பு?
ஆனால் தற்போது உருமாற்றம் பெற்றும் அம்பாசிடர் 2.0 ஆக வெளியாகவுள்ளது. ஆக இன்றைய் தலைமுறையினருக்கு ஏற்றவாறு, புதிய தொழில் நுட்பங்களுடன் இந்த கார் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதிய கார் உற்பத்தியானது சென்னையில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில் தயாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல்வேறு மாற்றங்கள்
இந்த ஆலையாகது சிகே பிர்லா குழுமத்தின் ஒரு அங்கமாக உள்ளது. இது குறித்து ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தின் இயக்குனர் உத்தம் போஸ் அறிக்கையில், புதிய அம்பாசிடர் கார்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய காரின் இன்ஜினுக்கான மெக்கானிக்கல் மற்றும் வடிவமைப்பு பணிகள் மேம்படத் தொடங்கியுள்ளது.

அம்பாசிடர் பிராண்ட் விற்பனை
ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனத்தின் உரிமையாளரான சிகே பிர்லா குழுமம், அதன் கார் பிராண்டை 80 கோடி ரூபாய்க்கு பிரெஞ்சு கார் பிராண்டான பியூஜியோட்டிற்கு 2017ம் ஆண்டில் விற்பனைச் செய்தது. தற்போது இந்த நிறுவனங்களின் கூட்டணி மூலம் புத்துயிர் பெறவுள்ளது. முந்தைய காலத்து அரசியல் வாதிகள், பணக்காரர்கள் என பலரின் அடையாளமாக திகழ்ந்த அம்பாசிடர், தற்போது மீண்டும் புத்துயிர் பெறவுள்ளது.
Ambassador 2.0 to be re-launched in Chennai
The Ambassador is one of the oldest favorite cars in India. It is currently being re-manufactured at the Hindustan Motors plant in Chennai.