டெக்சாஸ் கொலைகாரனின் இன்னொரு கொடூரம்: அம்பலப்படுத்திய அவரது தாத்தா


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி மாணவர்கள் 19 பேர்களை கொன்ற சால்வடார் ராமோஸ் தனது பாட்டியின் முகத்தில் துப்பாகியால் சுட்டுவிட்டு தப்பிய சம்பவம் தொடர்பில் அவரது தாத்தா வெளிப்படையாக பேசியுள்ளார்.

மேலும், தமது குடியிருப்புக்குள் இரத்தம் சிந்தியது தொடர்பில் அவர் தனியார் செய்தி ஊடகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை 66 வயதான செலியா கோன்சலஸ் என்ற தமது பாட்டியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, வீட்டைவிட்டு வெளியேறிய சால்வடார் ராமோஸ் பாடசாலைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்ததாக தெரிய வந்துள்ளது.

செலியா கோன்சலஸ் சுடப்பட்ட பின்னர், ராமோஸ் பாட்டியின் வாகனத்தில் அருகாமையில் உள்ள ராப் துவக்கப்பள்ளிக்கு விரைந்துள்ளார்.
அங்கு அவர் ஒரு வகுப்பறையில் 19 குழந்தைகளையும் இரண்டு ஆசிரியர்களையும் கொன்று பின்னர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செலியா கோன்சலஸ் லேசான காயங்களுடன் தப்பியதாகவே கூறப்படுகிறது. போன் பில் தொடர்பான தகராறில் பாட்டியுடன் ராமோஸ் கோபமடைந்தார் என்றே கூறப்படுகிறது.

ராமோஸ் கடந்த சில மாதங்களாக தனது தாத்தா பாட்டியுடன் வசித்து வந்ததாகவேக் கூறப்படுகிறது.
தனிமை விரும்பியான ராமோஸ் தவறான நட்பு வட்டத்தில் இல்லை எனவும், அவர் போதை மருந்து பழக்கம் இல்லாதவர் எனவும், ஆனால் இந்த தாக்குதல் சம்பவம் தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ராமோஸின் தாயார் அட்ரியானா ரெய்ஸ் தெரிவித்துள்ளார்.    

டெக்சாஸ் கொலைகாரனின் இன்னொரு கொடூரம்: அம்பலப்படுத்திய அவரது தாத்தா

டெக்சாஸ் கொலைகாரனின் இன்னொரு கொடூரம்: அம்பலப்படுத்திய அவரது தாத்தா



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.