மெகுல் சோக்சி மீது கூடுதல் வழக்கு: சிபிஐ தொடர்ந்தது

புதுடெல்லி: வைர வியாபாரி மெகுல் சோக்சி அவரது உறவினர் நீரவ் மோடி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் மோசடி செய்து விட்டு, நாட்டை விட்டு தப்பியோடினர். இது தொடர்பாக அவர்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த வாரம், மகாராஷ்டிராவில் உள்ள சோக்சிக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலத்தை பினாமி சொத்து பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க தீர்ப்பாயம் உத்தரவிட்டது.இந்நிலையில், … Read more

இனிக்கும் பழங்கள்.. கசக்கும் விலை உயர்வு – கோயம்பேடு சந்தை விலை நிலவரம்

சென்னை கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை அதிகரித்துள்ளது. கிலோவுக்கு பத்து ரூபாய் தொடங்கி 150 ரூபாய் வரை விலை உயர்ந்து காணப்படுகிறது. சென்னை கோயம்பேடு பழச்சந்தையில், ஒரு கிலோ மாதுளை ஒரு வாரத்திற்கு முன்பு கிலோவுக்கு 200 ரூபாய் விற்கப்பட்ட நிலையில் தற்போது அதன் விலை 350 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு சாத்துக்குடியின் விலை 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல திராட்சை, பப்பாளி, ஆரஞ்சு பழங்களின் விலை … Read more

'இரவின் நிழல்' டீசருக்கு வரவேற்பு

பார்த்திபன் இயக்கி, அவர் ஒருவர் மட்டுமே நடித்த வித்தியாசமான படம் 'ஒத்த செருப்பு'. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படம் தேசிய விருதையும் வென்றது. இந்த படத்திற்கு பிறகு பார்த்திபன், 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். புதுமுயற்சியாக இந்த படத்தை ஒரே ஷாட்டில் எடுத்துள்ளார் பார்த்திபன். இதற்காக முறையான ஒத்திகை நடத்தி, ஏகப்பட்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்தி உள்ளார். உலகின் முதல் நான் லீனியர் படம் என்ற பெருமையோடு … Read more

இந்தியாவில் மக்கள் தான் உந்து சக்தி ஜெர்மனியில் மோடி பெருமிதம்| Dinamalar

பெர்லின் : “ஜெர்மனியில் வாழும் இந்தியர்கள் தாய்நாட்டின் தயாரிப்புகளை உலகளவில் எடுத்துச் செல்ல உதவ வேண்டும்,”என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஜெர்மன் நாட்டில் வசிக்கும் இந்தியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: இங்கு வாழும் இந்தியர்கள் தாய்நாட்டின் தயாரிப்புகளை உலகளவில் எடுத்துச் செல்ல உதவ வேண்டும். கடந்த 2014ல் இந்தியாவில் 200 – -400 ‘ஸ்டார்ட் –அப்’ நிறுவனங்கள் இருந்தன. இப்போது 68 ஆயிரமாக அதிகரித்துள்ளன. கடந்த 7 – … Read more

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் போராட்டம்

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம்; தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது. பௌசர் வாடகைக் கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிப்பதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரின் உறுதிமொழி கிடைத்ததை அடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை முடிவடைந்துள்ள நிலையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என சங்கத்தின் … Read more

‘சுத்தி வளைச்சு பேச விரும்பல… பிரியாணி வருமா, வராதா?’ வைரல் மீம்ஸ்

IPL cricket memes: ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26ம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நடப்பு தொடர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் … Read more

தமிழகத்தில் 70 சதவீதம் பிரச்சினைகளுக்கு மதுக்கடையே காரணம் – மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழகத்தில் அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டுமானால் மதுவிலக்கை கொண்டு வரவேண்டும் என்று, அக்கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.  விழுப்புரத்தில் விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுமக்குழு கூட்டத்தில் பேசிய மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.,  “ஆளுநரும், தமிழக அரசும் ரெயில் தண்டவாளம் போல இணைந்து செயல்பட வேண்டும். யார் பெரியவர் என்ற ஈகோ இருக்கக் கூடாது.  பொதுமக்களையும், தேர்வு எழுதும் மாணவர்களையும் மின்வெட்டு பெரிதும் பாதித்துள்ளது. நிலக்கரி தட்டுப்பாடு இருந்தாலும், முன் எச்சரிக்கையாக கணித்து … Read more

ஆளுநர் பதவி அநாவசியமா? – மாநில சுயாட்சி பற்றி கொஞ்சம் பேசுவோமா? -2

ஆளுநர் என்பவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஒரு நியமன உறுப்பினர் தானே தவிர அவர் ஒன்றும் மக்களை சந்தித்து வாக்குகள் கேட்டு சனநாயக முறையில் தேர்தலை சந்தித்தவர் அல்ல, மாறாக அவர் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே நல்லுறவை பேணி காக்கும் பொருட்டு செயல்படக்கூடிய ஒரு ஒருங்கிணைப்பாளர். இந்த வார்த்தையை கேட்டால் ஏன் இவ்வளவு கலக்கம்? – மாநில சுயாட்சி பற்றி கொஞ்சம் பேசுவோமா? -1 இப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு ஆளுநர் தன்னிச்சையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட … Read more

மாணவர் நலனுக்கென பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்

மாணவர் நலனுக்கெனப் பள்ளிக்கல்வித் துறை வரும் கல்வியாண்டில் மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பள்ளி மேலாண்மைக் குழுவின் துணையுடன் மாதந்தோறும் பெற்றோர் – ஆசிரியர் – மாணவர் சந்திப்பு நடத்தப்படும்.  பள்ளி, வட்டார, மாவட்ட, மாநில அளவில் கலை விழா, விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு அதில் சிறந்த மாணவர்கள் புகழ்பெற்ற இடங்களுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் எனக் குறிப்பிட்டுள்ளது.  மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்களுக்குத் தலைமையாசிரியரின் பரிந்துரையின்படி வல்லுநர்களைக் கொண்டு ஆலோசனை … Read more