சிவகார்த்திகேயனை இயக்கும் வெங்கட்பிரபு

மாநாடு, மன்மதலீலை படங்களைத் தொடர்ந்து நாகசைதன்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. தமிழ், தெலுங்கில் தயாராகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது. இந்த படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது டான், அயலான் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் தமிழ் தெலுங்கில் தயாராகும் நிலையில் அடுத்தபடியாக வெங்கட்பிரபு இயக்கும் … Read more

பாக்., முன்னாள் பிரதமர் நவாசின் தண்டனையை ரத்து செய்ய பரிசீலனை| Dinamalar

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான ஊழல் வழக்கில், அவருக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனையை ரத்து செய்து, அவர் குற்றமற்றவர் என்பதை சட்டப்படி நிரூபிக்க வாய்ப்பளிப்பது குறித்து, அந்நாட்டின் புதிய அரசு பரிசீலித்து வருகிறது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டதை அடுத்து, 2017ல் அவரை பதவி விலக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் இரு ஊழல் வழக்குகளில், 2018ல் … Read more

சாப்பிடறதுக்கு முன்பு இதை தண்ணீரில் ஊறப் போடணும்… ஏன் தெரியுமா?

Magbo Fruit Health Benefits In tamil : குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது மாம்பழம். முக்கனிகளில் ஒன்றாக மாம்பழம் அதிக சுவையுடன் உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மை தருவதாகும். இதனால் மாம்பழ சீசன் வந்தவுடன் குழந்தைகள் அனைவரும் குஷியாகி விடுவார்கள். ஆனால், மாம்பழங்களை சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் ஊறவைத்து, அழுக்கை அகற்றவும், பயிர்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களை அகற்றவும் வழக்கமாக இதை செய்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆனால் இது ஒன்று மட்டுமே மாம்பழத்தை தண்ணீரிர் … Read more

தருமபுரி || மது போதையில் தள்ளாடி தள்ளாடி வந்த பள்ளி மாணவி – அதிர்ச்சி வீடியோ.!

அரசு பள்ளி மாணவி மதுபோதையில் சாலையை கடக்க முடியாமல் தள்ளாடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.  இதனால் கல்வியாளர்கள், பெற்றோர்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம், இண்டூர் பேருந்து நிலையத்தில், அரசு பள்ளி மாணவி ஒருவர் மது அருந்திவிட்டு தள்ளாடியபடி நடந்து வருவதை கண்ட பொதுமக்களில் ஒரு சிலர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர்.  இந்த விடியோக்கள் தற்போது வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. … Read more

“பாஜக, ஆர்.எஸ்.எஸ் நாட்டை சாதி, மத அடிப்படையில் பிரிக்க முடிவுசெய்துவிட்டன!" – அசோக் கெலாட்

இந்து நாட்காட்டியின்படி புத்தாண்டின் முதல் நாளான ஏப்ரல் 2 மற்றும் ராம நவமி தினத்தன்று, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. அதிலும், கடந்த ஏப்ரல் 2-ம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலம், கரோலி நகரில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்து அமைப்பினருக்கும், முஸ்லிம்களுக்குமிடையே வெடித்த கலவரத்தில் அங்கிருந்த பல்வேறு வாகனங்கள் மற்றும் கடைகள் தீக்கிரையாகின. மேலும், தொடர்ச்சியாக நடைபெற்ற இது போன்ற இந்து-முஸ்லிம் கலவரங்களில், பாதிக்கப்பட்ட மாநிலங்களின் … Read more

விற்பனைக்காக கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட கிளிகள், முனியாஸ் குருவிகள் மீட்பு

திருச்சி மாவட்டத்தில் விற்பனைக்காக கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த 400க்கும் மேற்பட்ட கிளிகள், முனியாஸ் குருவிகள் மீட்கப்பட்டு வனத்துறையின் பராமரிப்புக்கு பின் சுதந்திரமாக விடப்பட்டன. திருச்சி பாலக்கரை, கீழப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இறக்கைகள் வெட்டப்பட்டு கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில், கிளிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை மீட்ட வனத்துறையினர், மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் வைத்து பராமரித்து வந்த நிலையில், தற்போது இறக்கை முழுமையாக வளர்ந்ததால் அதனை கூண்டில் … Read more

பத்திரப்பதிவு துறையில் மோசடியில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

திருப்பத்தூர்: பத்திரப்பதிவுத்துறையில் மோசடியில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பதிவுத்துறையில் இதுவரை 44 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என பத்திரப்பதிவுத்துறைத் தலைவர் சிவன் அருள் தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்ட பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் குறைதீர்வு முகாம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், பத்திரப்பதிவுத்துறைத் தலைவர் சிவன்அருள் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ”தமிழகத்தில் 5,516 பத்திரங்கள் ஆள் மாறாட்டம் செய்து பதிவு செய்யப்பட்டுள்ளது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. … Read more

"போரில் யாரும் வெற்றி பெற முடியாது; இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது" – ஜெர்மனியில் பிரதமர் மோடி கருத்து

பெர்லின்: போரினால் உக்ரைன் மக்கள் மீதான மனிதாபிமான தாக்கம் தவிர, எண்ணெய் விலை, உலகளாவிய உணவு விநியோகம் மீது ஏற்பட்டுள்ள அழுத்தம், உலகின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் பெர்லின் நகரில் அந்நாட்டு பிரதமர் ஓலஃப் ஷோல்ஸூடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர், இருநாட்டு தலைவர்களும் ஒரு கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திரமோடி கூறியதாவது: “உக்ரைன் நெருக்கடி தொடங்கியதிலிருந்தே போரை … Read more

ஆஸ்துமா எப்படி கட்டுப்படுத்தலாம்? சில ஆயுர்வேத வழிமுறைகள் இதோ உங்களுக்காக..

பொதுவாக ஆஸ்துமா என்பது சுவாச அமைப்பில் உருவாகும் ஒரு நோயாகும். காற்று செல்லும் வழிகள் சுருங்குவதால் இது ஏற்படுகிறது. நுரையீரல், ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றது. இந்நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாகவும், பெண்களுக்கு குறைவாகவும் வருகின்றது. ஆண்களுக்கு அதிகமாக வரக்காரணம் அதிக மன ழுத்தம், கவலை. இதன் காரணமாக முதலில் தலைவலி, தூக்கமின்மை வரும். பின் நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல், ஆஸ்துமாவாக வருகின்றது.  இதனை ஆரம்பத்திலே  கட்டுப்படுத்துவது நல்லதாகும். அந்தவகையில் தற்போது ஆஸ்துமாவை கட்டுப்படுத்தக்கூடிய ஆயுர்வேத முறைகள் சிலவற்றை … Read more

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தாஜ்மஹாலில் தொழுகை செய்ய அனுமதி

ஆக்ரா: தாஜ்மஹாலில் தொழுகை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாளை காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு மணி நேரம் மட்டும் தாஜ்மஹாலில் தொழுகை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.