வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
டாக்கா: வங்கதேசத்தில் தனியாருக்கு சொந்தமான கன்டெய்னர் டெபோவில் ஏற்பட்ட தீவிபத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வங்கதேச சிட்டகாங்கின் சீதகுண்டா உபாசிலாவின் கடம்ராசூல் பகுதியில் உள்ள பிஎம் கண்டெய்னர் டெபோவில் நேற்று (ஜூன் 4) இரவு பலத்த தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். 450க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணையில், ரசாயனம் காரணமாக தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. நேற்று இரவு 9 மணிக்கு ஏற்பட்ட இந்த தீவிபத்து பின்னர் 11:45 மணியளவில் மளமளவென கொழுந்து எரிய துவங்கியது. கன்டெய்னர்களில் ஒன்றில் ரசாயனம் இருந்ததால், ஒன்றில் இருந்து மற்ற கன்டெய்னருக்கு தீ பரவ துவங்கியது. இந்த தீவிபத்து காரணமாக, அருகில் இருந்த வீடுகளிலும் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தது தெரியவந்துள்ளது.
Advertisement