ஆறு பந்துகளில் ஆறு சிக்சர் விளாசிய வீரர்! கதறிய பந்துவீச்சாளர்… வைரலாகும் வீடியோ



டி10 கிரிக்கெட்டில் முதல்முறையாக 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் கெய்ரன் பொல்லார்ட் கூட, இலங்கைக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி அசத்தியிருந்தார். இருப்பினும் டி10 போட்டிகளில் இந்த சாதனை, இன்னும் யாராலும் செய்யப்படாமல் இருந்தது.

இந்நிலையில் இதனை புதுச்சேரி வீரர் சாத்தியப்படுத்தி அசத்தியுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற டி10 லீக் தொடரில் ராயல்ஸ், பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய ராயல்ஸ் அணியில் ரகுபதி 30 பந்துகளில் 84 ரன்களை குவித்ததால், அந்த அணி 10 ஓவர்களில் 157/3 ரன்களை சேர்த்தது.

பரமேசுவரன் 2/25 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மெகா இலக்கை துரத்திக் களமிறங்கிய பேட்ரியாட்ஸ் அணி 5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அப்போது களத்திற்குள் வந்த கிருஷ்ணா பாண்டே 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 12 சிக்ஸர்களை விளாசி அசத்தினார். 19 பந்துகளில் 83 ரன்களை குவித்தார். ஸ்ட்ரைக் ரேட் 436ஆக இருந்தது.

இருப்பினும் இறுதிக் கட்டத்தில் அரவிந்த் ராஜ் இவரை வீழ்த்தியதால், பேட்ரியாட்ஸ் அணி இறுதியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.