சென்னை: தங்களை விடுவிக்க க் கோரி நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்தது. உச்சநீதிமன்ற உத்தரவின் படி விடுதலை செய்ய ஆளுநரின் கையெழுத்து அவசியம். நளினி, ரவிச்சந்திரனை விடுதலை செய்ய உயர்நீதிமன்றமே பரிசீலிக்கலாம் என தமிழக அரசு வாதிட்டது.
