டாக்கா : வங்கதேசத்தில், ரசாயன கிடங்கு தீ விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண, அவர்களின் உறவினர்களிடம் இருந்து மரபணு மாதிரி சேகரிக்கும் பணி துவங்கிஉள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், சிட்டகாங் துறைமுகம் அருகே உள்ள ரசாயன கிடங்கில், மூன்று தினங்களுக்கு முன் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில், 49 பேர் உயிரிழந்தனர்; 450க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில், 13 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரில், பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் இறப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.இதற்கிடையே, இறந்தவர்களை அடையாளம் காண, அவர்களின் உறவினர்களிடம் இருந்து மரபணு மாதிரிகளை சேகரிக்கும் பணி துவங்கி உள்ளது. விபத்து நடந்த ரசாயன கிடங்கில், 26 சரக்கு பெட்டகங்களில், ‘ஹைட்ரஜன் பெராக்ஸைடு’ எனும் ரசாயனம் இருந்துள்ளது. இதில் ஏற்பட்ட கசிவு தான், தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டாக்கா : வங்கதேசத்தில், ரசாயன கிடங்கு தீ விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண, அவர்களின் உறவினர்களிடம் இருந்து மரபணு மாதிரி சேகரிக்கும் பணி துவங்கிஉள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.