தனது இராணுவ தளபதிகளுடன் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ரஷ்ய ஜனாதிபதி புடின், திடீரென நோய்வாய்ப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
90 நிமிட காணொளி கூட்டம் ஒன்றைத் தொடர்ந்து தனது இருக்கையிலிருந்து எழுத புடின் திடீரென தலைச்சுற்றல், சோர்வு முதலான அறிகுறிகளைக் கொண்ட ஒரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல், கிரெம்ளின் வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்தும் சமூக ஊடக சேனல் ஒன்றில் வெளியாகியுள்ளது.
மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புடினுக்கு உடனடியாக அவசர சிகிச்சையளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அந்த சேனல் தெரிவித்துள்ளது.
இந்த பிரச்சினையால்தான் ஆண்டுதோறும் புடின் மக்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சேனல் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, புடின் நீண்ட நேரம் பொதுமக்கள் முன் தோன்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என அவரது மருத்துவர்கள் அவரை வலியுறுத்தியுள்ளார்களாம்.
Photo Credit: AP