சம்பளம், சமூக பாதுகாப்பு, தொழிற்துறை உறவுகள், தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைமைகள் தொடர்பான 4 தொழிலாளர் மசோதாக்கள் ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால் வேலை வாய்ப்பு என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ளது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் தொழிலாளர் குறியீடுகளின் படி, விதிகளை உருவாக்க வேண்டும். மத்திய அரசு மற்றும் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஏற்கனவே நான்கு தொழிலாளர் சட்டங்களின் கீழ் சட்டங்களை வெளியிட்டுள்ளன.
பிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்: வட்டியை உயர்த்தியது எஸ்பிஐ

தினசரி 12 மணி நேரம்
மத்திய அரசின் 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டியிருக்கும். அதாவது தினசரி 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதன் மூலம் ஊழியர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இது குறித்த இறுதி வரைவுகளை விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலவரம் என்ன?
தற்போது பெரும்பாலான நிறுவனங்களிலும் வாரத்தில் 6 நாட்கள், தினமும் 8 மணிநேரம் வேலை நேரம் உள்ளது. இதன் காரணமாக அவர்கள் வாரத்தில் 48 மணிநேரம் வேலை செய்கிறார்கள். தற்போது ஒரு வாரத்தில் 1 நாள் விடுப்பு உள்ளது. ஆனால் புதிய விதியின் கீழ், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை இருக்கும். ஊழியர்கள் வாரத்திற்கு அதிகபட்சம் 48 மணி நேரம் மட்டுமே பணியாற்றுவதற்கான வரம்பு அவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கூறியுள்ளார்.

உடன்பாடு வேண்டும்
ஆனால் இந்த விதிகளை அமல்படுத்துவதில் நிறுவனத்திற்கும் ஊழியர்களுக்கும் இடையே ஒரு உடன்பாடு வேண்டும். இது குறித்து நாங்கள் ஊழியர்களையோ அல்லது முதலாளிகளையோ கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் இது ஒரு நெகிழ்வுத் தன்மையை அளிக்கும். இது மாறிவரும் கலாசாரத்து ஏற்ப இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

சம்பள மசோதா
புதிய சம்பள மசோதா (New Wage Code Bill) மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜ்விட்டி, அகவிலைப்படி, டிராவல் அலவன்ஸ் மற்றும் வீட்டு வாடகை கொடுப்பனவு என அனைத்திலும் மாற்றம் ஏற்படலாம். புதிய தொழிலாளர் சட்டத்தின் மூலமாக வருங்கால வைப்பு நிதி, கிராஜ்விட்டி, அகவிலைப்படி, பயணப் படி மற்றும் ஹவுஸ் ரெண்ட் அலவன்ஸ் என அனைத்தும் 50%க்கு மேல் இருக்காது.

சம்பளம் குறையும்
புதிய சம்பள மசோதாவின் படி, அடிப்படை சம்பளத்தின் பங்கு 50% அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் 50%-க்கு குறைவாக இருந்தால் அவை விரைவில் மாறிவிடும், மேலும் உங்களது அடிப்படை சம்பளத்துடன் சிடிசி (CTC) மேலும் அதிகரிக்கும். பல நிறுவனங்களும் அடிப்படை சம்பளத்தினை மிகக் குறைவாக கொடுத்து, மற்ற அலவன்சுகளை அதிகமாக கொடுத்து வருகின்றன. இதன் மூலம் உங்களுக்கு வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு குறையும். ஆனால் இந்த புதிய மசோதாவால் இனி பிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும். எனினும் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும். இதனால் ஊழியர்கள் வீட்டிற்கு எடுத்து செல்லும் சம்பளம் குறையும்.

பிஎஃப் அதிகரிக்கும்
புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த பின் வீட்டிற்கு எடுத்து செல்லும் சம்பளம் குறைவாக இருக்கும். எனினும் அடிப்படை சம்பளத்தில் தான் 12 + 12 = 24% வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு மாற்றம் செய்யப்படும். புதிய விதிகளின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படலாம் என்பதால், உங்களது சேமிப்பு அதிகரிக்கும். அதாவது பிஎஃப் பங்களிப்பு அதிகரிக்கும்.

இப்படி தான் சம்பளம்?
உதாரணத்திற்கு ஒரு ரமேஷின் சம்பள விகிதம் 1 லட்சம் ரூபாய் என வைத்துக் கொண்டால், அதில் சம்பளதாரரின் மற்ற அலவன்ஸ்கள் 50,000 ரூபாய்க்கு மேல் இருக்க முடியாது. ஆனால் அவரின் அடிப்படை சம்பளம் 50,000 ரூபாயாக இருக்கும். ஏனெனில் இந்த அடிப்படை சம்பளத்தினை அதிகரிக்கும்பொருட்டு நிறுவனங்கள் மற்ற அலவன்ஸ்களை குறைக்க முயலும்.

கிராஜ்விட்டி அதிகரிக்கும்
அடிப்படை சம்பளம் அதிகரிக்கும்போது கிராஜ்விட்டியும் அதிகரிக்கும். ஏனெனில் ஒவ்வொரு வருட சேவைக்கும் கடைசியாக கொடுக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தின் 15 நாட்களுக்கு சமமான தொகையாக நிறுவனங்கள் கிராஜ்விட்டியாக கொடுக்கப்படுகிறது. ஆக அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் என்பதால், இந்த கிராஜ்விட்டி தொகையும் அதிகரிக்கும்.

1 வருடம் போதும் – கிராஜ்விட்டி உண்டு
புதிய தொழிலாளர் சட்டங்களில் கிராஜ்விட்டியிலும் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. ஏற்கனவே இருந்த விதிகளின் படி 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு கிராஜ்விட்டி வழங்கப்படும். ஆனால் புதிய தொழிலாளர் சட்டத்தின் படி, 1 ஆண்டு பணிபுரிந்தாலே கிராஜ்விட்டி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஆக இதனால் பெரும்பாலான ஊழியர்கள் பயன்பெறுவர்.

விடுமுறை நாட்கள்
ஒரு வருடத்தில் விடுமுறைக்கான தகுதி தேவையை 240 நாட்கள் வேலை என்ற நிலையில் இருந்து 180 நாட்களாக குறைத்துள்ளது. ஒரு ஊழியர் இந்த விடுமுறையை பயன்படுத்துவது, அல்லது அடுத்த ஆண்டிற்கு எடுத்து செல்வது என பலவற்றையும் திட்டமிட்டுள்ளது.

முழு விவரம் எப்போது?
ஆக இவ்வளவு நல்ல விஷயங்களுக்கு மத்தியில் தான் இந்த 4 தொழிலாளர் மசோதாக்கள் அமல்படுத்த திட்டமிடப்பட்டு வருகின்றன. எனினும் இது அமல்படுத்தப்பட்ட பின்னர் தான் முழுமையான விவரம் என்ன என்பது தெரியவரும். எப்படியிருப்பினும் இது தொழிலாளர்களுக்கு சாதகமான ஒரு அறிவிப்பாகத் தான் உள்ளது.
India’s new labour law may implement from July 1, 2022: check details here
The four labor bills relating to pay, social security, industrial relations, occupational safety, health and working conditions are expected to come into force from July 1, 2022.